தமிழ்நாட்டில் கொரில்லா கிளாஸ் தொழிற்சாலை உருவாகிறது.
அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ளது. பல்வேறு விதமான பயன்களுக்காக ஸ்மார்ட் ஃபோன்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதே நேரம் எவ்வளவு விலை உயர்ந்த செல்போன்களாக இருந்தாலும் தவறி கீழே விழும் பொழுது அது உடைந்து நொறுங்கி பெரிய அளவிலான செலவுக்கு காரணம் ஆகின்றது. ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் பெரும்பான்மையான நபர்கள் இவ்வாறான செலவை கண்டிருப்பர்.
இப்படி செல்போன்கள் கீழே விழுந்தவுடன் முதலில் ஏற்படும் சேதம் டிஸ்ப்ளேகளில் தான். இதனாலேயே டிஸ்ப்ளேகளை பாதுகாக்க ஸ்கிரீன் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அதுவும் விரிவடைந்து போன்களை பாதுகாப்பை உறுதி செய்ய கொரில்லா கிளாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனாலையே பெரும்பான்மையான நபர்கள் எவ்வளவு விலை கொடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்கி இருந்தாலும், அடுத்த வேலையாக உடனே செய்வது போனுக்கு கொரில்லா கிளாஸ் ஓட்டுவது ஆகும். இதனாலேயே தற்போது போன்களின் தேவைக்கு நிகராக கொரில்லா கிளாஸ்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது.
தற்போது போன்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினருமே தங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களின் கொரில்லா கிளாஸ் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இதனால் அதிகத் தேவை ஏற்பட்டிருப்பதை அடுத்து கொரில்லா கிளாஸை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் ஐஎன்சி நிறுவனம் சென்னையில் அதற்கான உற்பத்தி ஆலையை தொடங்க முடிவு செய்திருக்கிறது.
கார்னிங் ஐஎன்சி நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பக்கத்தில் 25 ஏக்கர் பரபரப்பளவில், 300 நபர்கள் பணியாற்ற கூடிய அளவில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1000 கோடி ரூபாயை அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆலையை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.