யுபிஐ மூலம் கடன்: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது ரிசர்வ் வங்கி!

யுபிஐ பண பரிவர்த்தனை
யுபிஐ பண பரிவர்த்தனை

ந்தியாவில் வளர்ந்து வரும் யுபிஐ பரிவர்த்தனையை கருத்தில் கொண்டு தற்போது ரிசர்வ் வங்கி யு பி ஐ வழியாக கடன் பெரும் திட்டத்தை அறிமுகம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் பணமற்ற இணையவழி யுபிஐ பரிவர்த்தனை மிக முக்கிய செயல்பாடாக மாறி இருக்கிறது. இதன் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன் பெறுகின்றனர். மேலும் பணத்தினுடைய பயன்பாடும் யுபிஐ பரிவர்த்தனையால் குறைந்திருக்கிறது.

மேலும் யுபிஐ பரிவர்த்தனை தற்போது அனைத்து வகை தொழில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் இதை பெரிதும் விரும்புகின்றனர். இதனால் யுபிஐ பரிவர்த்தனை ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக தற்போது கடன் பெறும் திட்டம் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.

இதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத பயனாளர்கள் யுபிஐ பரிவர்த்தனை மூலம் கடன் தர முடியும். இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உரிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகைகளை யுபிஐ வழியாக கடனாக பெற முடியும். மேலும் இந்த யுபிஐ கடன் செயல்முறைக்கு பல்வேறு வகையான நிபந்தனைகளுடன் ரிசர்வ் வங்கி தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

தற்போது முதல் கட்டமாக குறைந்த அளவிலான தொகைகளை கடனாக பெற்று பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்தியாவில் தற்போது கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிறுவனங்கள் வழியாக யுபிஐ கடன் பெரும் திட்டத்தை பயன்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com