வீழ்ச்சியில் கிரிப்டோ கரன்சி: முதலீட்டாளர்கள் வேதனை!

வீழ்ச்சியில் கிரிப்டோ கரன்சி:  முதலீட்டாளர்கள் வேதனை!
Published on

உலகம் முழுவதும் எதிர்கால பண பரிவர்த்தனையாக பேசப்பட்டு வந்த கிரிப்டோகரன்சி மிகப்பெரிய கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் வேதனை.

உருவம் அற்ற காயின்கள் என்று கருதப்படும் கிரிப்டோகரன்சிகள் உலகம் முழுவதும் மிக முக்கிய பங்குச் சந்தை வணிகமாக மாறி இருக்கிறது. கிரிப்டோ கரன்சிகளுடைய அதிதீவிர வளர்ச்சி பெருவாரியான முதலீட்டாளர்களை தன் பக்கம் இருக்க காரணமானது. கிரிப்டோகரன்சினுடைய ஏற்ற இறக்கம் என்பது எந்த நேரத்திலும் நேரத்தில் மாறக்கூடியது என்பதால் அபாயங்களும் அதிகம். ஆனாலும் கிரிப்டோ கரன்சியினுடைய அதிதீவிர வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் பல்வேறு  காயின்களில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோ கரன்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சரிவு முதலீட்டாளர்களை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் அதிக அளவிலான வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.

கிரிப்டோகரன்சியின் முக்கிய பரிவர்த்தனையாக இருப்பது பிட்காயின், இரண்டாவது இடத்தில் இருப்பது எந்திரியம் காயின். உலக சந்தை மூலதனத்தில் உள்ள 1.8 ட்ரில்லியன் கிரிப்டோ கரன்சிகளில் 660 எக்சேஞ்ச்கள் 1.8 சதவீதம்  சரிவை சந்தித்துள்ளன.அதேசமயம் பிட்காயின் 555 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், எந்திரியம் 215 பில்லியன் அமெரிக்க டாலராகவும் மூலதமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது 3.1 சதவீதம் சரிவாகும். எந்திரியம் காயின் 1.66 சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த வாரத்தோடு  ஒப்பிடும்போது 3.02 சதவீதம் சரிவாகும்.

மேலும் ராக்கெட் பூல், இன்ஜெக்டிவ், யுனஸ் ஜெட் லிய, காஸ்பர், சிந்தெடிக்ஸ் ஆகிய சில காயங்கள் மட்டுமே லாபத்தை சந்தித்துள்ளன. அதேசமயம் முக்கிய கிரிப்டோ கரன்சிகளான எஸ்இஐ, கன்பிளக்ஸ், ஷிபா இனு, பிட்காயின் கேஷ், யுனிஸ்வாப், ட்ரெண்டிங் காயின்கள், சைபர்கனெக்ட், எக்ஸ்.காம், போன் ஷிபா இனு, எஸ்இஐ, ஷிபா இனு ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com