
அதிவேகமாக வளரும் நாடான இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் வறுமை மற்றும் சமத்துவமின்மை பெருமளவில் சரிந்துள்ளதாக பொருளாதார நிபுணர்களான சுர்ஜித் எஸ் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகியோரின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது என்ற பிரபலமான கருத்துகளுக்கு மாறாக, நுகர்வு சமத்துவமின்மை உண்மையில் குறைந்துள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள், வறுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பொருளாதார திட்டங்கள் மக்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மாறிவரும் பொருளாதார வளர்ச்சிகள் வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தியுள்ளன. 100 நாள் வேலை திட்டங்கள், இலவச அரிசி, கோதுமை திட்டங்கள், அரசின் இலவசப் பயன்பாடுகள் நாடு முழுக்க வறுமையில் விழுந்தவர்களின் சுமையை குறைத்துள்ளன.
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க வீட்டுச் செலவுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் தீவிர வறுமை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார இடைவெளிகள் குறைந்துள்ளதாக வாதிடுகிறது.
உலக வங்கியின் தரவுகளின் படி $3.65 PPP வறுமைக் கோட்டில், இந்தியாவின் வறுமை விகிதம் 2011-12 இல் 52 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் வெறும் 15.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குறைந்த பட்சம் $1.90 PPP தீவிர வறுமைக் கோட்டிலிருந்து ,வறுமை விகிதம் இப்போது 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
பொருளாதார சமத்துவமின்மையின் முக்கிய அளவீடான கினி குணகம், 2011-12 ஆம் ஆண்டில் 37.5 % ஆக இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 29.1 % ஆகக் குறைந்தது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சமத்துவமின்மை பொதுவாக அதிகரிக்கும் , ஆனால் இங்கு பொருளாதார சமத்துவமின்மை குறைந்துள்ளதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா போன்ற பெரிய மற்றும் உயர் வளர்ச்சி கொண்ட பொருளாதாரத்தில் சமத்துவமின்மை குறைப்பு என்பது விதிவிலக்கானது. பழைய நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவின் தற்போதைய வறுமைக் கோடுகள் பொருளாதார யதார்த்தங்களை பிரதிபலிக்கவில்லை என்று ஆய்வு கூறுகிறது. இதனால் புதிய வறுமைக் கோட்டின் தேவை அவசியமானது.
மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 33% மக்களின் செலவு அளவைப் பொறுத்து வறுமைக் கோடு விகிதம் வரையறுக்கப் படவேண்டும். ஐரோப்பாவைப் போன்ற ஒப்பீட்டு வறுமை அளவை ஏற்பது , ஒரு புதிய வறுமை அளவுகோலை ஏற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது. அங்கு வறுமைக் கோடு சராசரி வருமானத்தில் 60 % ஆக வரையறுக்கப்படுகிறது.
இந்தியாவின் கடைசி அதிகாரப்பூர்வ வறுமை மதிப்பீடுகள் டெண்டுல்கர் மற்றும் ரங்கராஜன் குழுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால் , நிதி ஆயோக் திருத்தம் செய்ய உத்தரவிட்ட போதிலும் இன்னும் அவற்றைத் திருத்தவில்லை. தரவு நம்பகத்தன்மை குறித்த கவலைகளையும் இந்த ஆய்வு நிவர்த்தி செய்கிறது. சமீபத்திய ஆய்வுகள் நுகர்வு தரவை மிகவும் துல்லியமாகப் பிடிக்க மேம்படுத்தப்பட்ட மூன்று வருகை முறையைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது.
கணக்கெடுப்பு நுகர்வு-தேசிய கணக்குகள் விகிதம் காலப்போக்கில் நிலையானதாக இருந்தது. 2011-12 இல் 52.4 சதவீதமாகவும், 2022-23 இல் 46.9 சதவீதமாகவும், 2023-24 இல் 47.9 சதவீதமாகவும் வறுமையில் குறைப்பு காணப்படுகிறது. தீவிர வறுமை கிட்டத்தட்ட நாட்டில் ஒழிந்துவிட்டதால், இந்தியா மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதில் இருந்து, நடுத்தர வர்க்கத்தை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.