Loan
Loan

நல்ல கடன், கெட்ட கடன் வித்தியாசம் என்ன ? 

டன் என்பது எப்போதும் தவிர்க்கப்பட வேண்டியது. அது ஒரு அடிமைத்தனம். நமது முன்னோர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எல்லாவற்றிற்கும் பணத்தைச் சேமித்தப் பின்னரே, அதனை வாங்கினர். கடனின் தொல்லைகளை உணர்ந்திருந்தனர். கம்பர் கூட ‘'கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’' என்று கடன் பட்டவர்களின் உள்ளக் குமுறலை , தனது கம்பராமாயணத்தில் கூறியுள்ளார்.கடன் கண்டிப்பாக தவறானது என்றாலும், கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் என்றால், கடனில் இரு வகை உண்டு.

  1. நல்ல கடன் - எதிர்காலத்தில் முதலீட்டை, உங்களுக்கு பன்மடங்கு ஈட்டித் தருவது.

  2. கெட்ட கடன் - எதிர்காலத்தில், உங்களது நிதியில் பெரிய ஓட்டையைக் கொண்டு வருவது

நல்ல கடனுக்கு உதாரணமாக, பின்வருபவற்றைக் கூறலாம்.

  • வீடு வாங்குவது - அத்தியாவசியம். மன நிம்மதி. அரசின் வரிச்சலுகைகள் உண்டு. மிக அதிக பணம் தேவைப்படும். சேர்த்து வாங்குவது கடினம்.

  • தொழில் தொடங்குவது - எதிர்காலத்தில் பணத்தை பன்மடங்கு ஈட்டித் தருவது, அரசின் வரிச்சலுகைகள் உள்ளன.

  • மேல்படிப்பு படிப்பது - கல்வி என்ற மூலதனம், எதிர்காலத்தில் நல்ல ஒரு வேலை மற்றும் தொழிலுக்கான அஸ்திவாரம். வரிச்சலுகைகள் உண்டு

கெட்ட கடனுக்கு உதாரணமாக, பின்வருபவற்றைக் கூறலாம்.

  • சுற்றுலா செல்லக் கடன் - சுற்றுலா அத்தியாவசியம் அல்ல. பணம் சேர்த்து சுற்றுலா செல்ல வேண்டும்.

  • தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி வாங்கக் கடன் - அத்தியாவசியம் அல்ல. பணம் சேர்த்து வாங்க வேண்டும்.

  • பங்குச் சந்தை முதலீடு செய்ய கடன் - பங்குச் சந்தை முதலீடு, முதலுக்கே மோசமாகலாம். பணம் சேர்த்து சொந்த பணத்தில் செய்தால், பணம் இழந்தாலும், கடன் தொந்தரவு இல்லை.

கடன் வாங்குவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. எல்லாவற்றிற்கும் பணம் சேமித்து, அதனைக் கொண்டு சம்பாதிப்பது தான் நல்ல விஷயம். ஆனால், தொழில் தொடங்க, மேல்படிப்பு படிக்க போன்ற விதிவிலக்குகளில் கடன் வாங்கி எதிர்காலத்தில் பணத்தைச் சம்பாதிக்கலாம். இவற்றிற்கு கூட, கடன் வாங்காமல் செய்தால் இன்னும் நலம். அதிக மன நிம்மதி. வாங்கிய கடனையும் , எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அடைத்து, பண இழப்பையும், மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com