வேலையிழப்புக்குப் பின் EMI கட்டுவதை எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?

Unemployment - Loan EMI
Loan EMI
Published on

மாதச் சம்பளக்காரர்கள் பலருக்கும் பெரிய தலைவலியாக இருப்பது EMI தான். இவர்களின் பாதி சம்பளம் EMI கட்டுவதற்கே செலவாகி விடும். இந்நிலையில் வேலையை இழந்தால் இவர்களின் நிலைமை பரிதாபம் தான். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வேலையிழப்பு சர்வ சாதாரணமாகி விட்டது. பல தனியார் நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையை அவ்வப்போது எடுத்து வருகின்றன. இந்நிலையில் வேலையிழந்த ஒருவர் EMI பிரச்சினையில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.‌

வேலையிழந்த பெரும்பாலான ஊழியர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நிதானமாக சிந்தித்தால், நிச்சயமாக மாற்று வழியைக் கண்டறிய முடியும். ஆனால் திடீர் வேலையிழப்பு, அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பயத்தை கொண்டு வந்து விடுகிறது. இதனால் பலரும் விரக்தியில் என்ன செய்வதென்பதே தெரியாமல் இருப்பர். இனி குடும்பச் செலவுகளை எப்படி சமாளிப்பது, EMI தொகையை எப்படிக் கட்டுவது, வாடகை, மின்சாரக் கட்டணம் மற்றும் திடீர் செலவுகளை எப்படி சமாளிப்பது என அடுக்கடுக்கான கேள்விகள் இவர்கள் முன்வந்து நிற்கும்.

வேலையிழப்புக் காலங்களில் பல்வேறு நிதி நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் சோர்ந்து விடாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பதை ஆழமாக சிந்தித்தல் அவசியம். அவ்வகையில் முதலில் நாம் EMI தொகையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் EMI பிரச்சினையை தீர்த்து விட்டால், மற்ற நிதி சிக்கல்களை மிக எளிதாக நம்மால் கையாள முடியும்.

இதையும் படியுங்கள்:
கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? சாணக்கியர் சொல்லும் இந்த 6 விஷயங்களைப் பின்பற்றுங்கள்!
Unemployment - Loan EMI

EMI தொகையை கட்ட முடியாத சூழலில் நாம் 3 விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் நாம் நேரடியாக வங்கிக்குச் சென்று தற்போதைய நிலைமையை எடுத்துக் கூறி, “மாரடோரியம்” கேட்க வேண்டும். அதாவது EMI தொகையை சில மாதங்கள் கட்டாமல் ஒத்தி வைப்பது. இரண்டாவது, மாதாந்திர தவணைத் தொகையைக் குறைத்து மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது, உங்களிடம் இருக்கும் சேமிப்புப் பணத்தை மொத்தமாக கட்டி, “ஒன் டைம் செட்டில்மென்ட்” கேட்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் வட்டி, கூட்டு வட்டி மற்றும் அபராதத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும். இருப்பினும் இதற்கு வங்கி மேலாளர் ஒப்புக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். ஏனெனில் வாடிக்கையாளருக்கு இந்த வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கட்டாயம் வங்கிகளுக்கு இல்லை.

இதையும் படியுங்கள்:
மாதச் சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு: பணத்தை சேமிக்கும் 10 வழிகள் இதோ!
Unemployment - Loan EMI

நமது நிலைமையைக் கூறி வங்கியிடம் கோரிக்கை வைப்பதில் தவறேதுமில்லை. முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் அடுத்த சில மாதங்களுக்குள் வெகு விரைவில் வேறொரு வேலையில் சேர்ந்து விட வேண்டும். இல்லையென்றால், அடுத்தடுத்த மாதங்களில் நிதி நெருக்கடி மேலும் சிக்கலாகி விடும். அப்படி வேலை எதுவும் கிடைக்காத பட்சத்தில், உங்களிடம் இருக்கும் திறமையைக் கொண்டு சிறுதொழில் தொடங்கவோ அல்லது பகுதி நேர வேலைக்கோ செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com