
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்தாண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இந்தாண்டு ஆரம்பம் முதலே எந்த வருடமும் இல்லாத அளவில் தங்கம் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே இருக்கிறது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.31 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
மிகவும் விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றான தங்கம் இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான உயர்வு இருந்தபோதிலும், இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சந்தை நிலை மற்றும் அமெரிக்க டாலரின் வலிமை உள்ளிட்ட பல காரணிகளால் இந்தியாவில் தங்கத்தின் விலைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உள்ளூர் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து நகரத்திற்கு நகரம் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. தங்கத்திற்கான தேவை மற்றும் விநியோக அதிகரிப்புடன், அதன் விலைகளும் அதிகரித்துள்ளன.
அக்டோபர் 10-ம்தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ரூ.11,340-க்கும், ஒரு பவுன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஜி.எஸ்.டி., செய்கூலி உள்ளிட்டவற்றை சேர்த்தால் நகையாக வாடிக்கையாளரிடம் வந்து சேரும் தங்கம் பவுன் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடுகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இந்தியாவில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதுபோலவே இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகளவும் வித்தியாசம் காணப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவின் முக்கிய தங்க நகை சந்தையாக விளங்கும் சென்னை இந்தியாவிலேயே தங்கம் அதிக விலை கொண்ட நகரங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,480க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.91,840க்கும் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களை விட இங்கு தான் தங்கத்தின் விலை அதிகம்.
தொழில் நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,320க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.90,560க்கும் விற்பனையாகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகை சந்தையான ஜெய்ப்பூரில் தங்கத்தின் விலை உயர்வாகக் காணப்படுகிறது. அந்த வகையில் ஜெய்ப்பூரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,314க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.90,512க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூனேவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,425க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நகை வியாபாரத்தில் முன்னணி நகரமான ஹைதராபாத்தின் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,260க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.90,080 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,255க்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.90,040 என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகை விற்பனை சந்தைகளில் ஒன்றான மும்பை, மற்ற மாநிலங்களை விட குறைந்த விலையைக் கொண்டுள்ளது.
கொல்கத்தாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,355க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.90,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜார்கண்ட்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,525க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.92,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,380க்கும், ஒரு சவரம் தங்கத்தின் விலை ரூ.91,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் 8 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை மாற்றங்களை தமிழகத்தில் சென்னையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலிடத்திலும், ஜார்கண்ட், பூனே, இரண்டாம் இடத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களை பெங்களூரு, ஜெய்பூர், டெல்லி, சென்னை, கேரளா போன்ற மாநிலங்கள் பிடித்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஹைதராபாத், மும்பையில் தான் தங்கத்தின் விலை மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களுக்கு இடையே தங்கத்தின் விலையில் வித்தியாசம் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.