முதலீட்டைத் தள்ளிப்போடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத் தான்!

Invest
Invest
Published on

இன்றைய காலத்தில் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் பல முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன. முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, முதலீடு செய்யாமல் இருப்பவர்களும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கின்றனர். இவர்களை முதலீடு செய்ய விடாமல் தடுக்கும் காரணிகள் என்னென்ன? அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

எதிர்காலத் தேவைக்கு இன்றைய முதலீடு தான் மூலதனம். இதனைக் கருத்தில் கொண்டு தான் பலரும் சேமிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கம் பொதுமக்களிமடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒருசிலர் இன்றளவும் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் கடந்து நமக்கான முதலீட்டை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

குறைந்த ஊதியம்:

இந்தியாவில் வாழும் மக்களில் அதிகம் பேர் நடுத்தர வர்க்கத்தினர்தான். இவர்களில் பலரது மாத வருமானம் ரூ.20,000-க்கும் குறைவாக உள்ளன. இந்த வருமானத்தில் தான் குடும்ப செலவுகள் உள்பட அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். வருங்காலத் தேவைக்கு முதலீடு செய்ய நினைத்தாலும், செலவுகள் போக மீதித் தொகை ஏதும் இருப்பதில்லை. இந்நிலையில், பலருடைய முதலீட்டு எண்ணம் தள்ளித் தள்ளிப் போகின்றன. ஆகையால் இவர்கள் மாதந்தோறும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் முதலீட்டிற்கும் ஒரு சிறு தொகையை ஒதுக்கி விட்டால், அதன்பின் தள்ளிப் போட வேண்டிய அவசியமே இருக்காது.

நிதி குழப்பம்:

சிக்கனமாக செலவு செய்பவர்களுக்கு கூட முதலீட்டை எங்கிருந்து தொடங்குவது என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற முதலீட்டுத் திட்டங்கள் சந்தையில் உள்ளன. இதில் எந்தத் திட்டம் நல்லது, எதில் முதலீடு செய்வது என்ற குழப்பத்தாலே பாதி பேர் முதலீட்டைத் தள்ளிப் போடுகின்றனர். இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட முறையான நிதி ஆலோசனை பெற்று முதலீட்டைத் தொடங்கலாம்.

தாமதமான முதலீட்டு எண்ணம்:

தொடக்கத்திலேயே முதலீடு செய்திருக்கலாம், இப்போது முதலீடு செய்தால் எந்தப் பலனும் கிடைக்காது என்ற எண்ணமும் சிலரைத் தடுக்கிறது. முதலீடு செய்யாமல் இருப்பதற்கு தாமதமாக முதலீடு செய்வது எவ்வளவோ மேல்.

இதையும் படியுங்கள்:
நீங்க புத்திசாலிதானே? 3 பக்கெட் பிளான்களில் உடன் முதலீடு செய்யுங்கள்!
Invest

அச்சம்:

முதலீடு செய்தால் அந்தப் பணம் திரும்ப கிடைக்குமா என்ற அச்சம் கூட சிலரை முதலீடு செய்ய விடாமல் தடுக்கிறது. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களும் இவர்களின் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன. ஆகையால் இவர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.

முதலீடு செய்ய பல திட்டங்கள் இருப்பது போலவே, முதலீட்டைத் தடுக்கவும் அவ்வப்போது ஒரு காரணம் கிடைத்து விடும். இவற்றை சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் நீங்கள் தான் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com