சுமையாக மாறும் கல்விக் கடன்கள்! தவிர்க்க என்ன செய்யலாம்?

Financial Burden
Educational Loan
Published on

கல்விக் கடன் வாங்கி விட்டு, பிறகு நிதி நெருக்குடிக்கு ஆளாகும் இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் உள்ளனர். இவர்கள் கல்விக் கடன் எனும் சுமையை எப்படி இறக்கி வைக்கலாம் என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.

பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், உயர்கல்வியைத் தொடர வங்கியில் கிடைக்கும் கல்விக் கடனையே அதிகம் நம்பியுள்ளனர். உயர்கல்வி முடியும் வரை வட்டி இல்லை என்றாலும், அதன்பிறகு கல்விக் கடனுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. இருப்பினும் இந்த நேரம் கல்வியை முடித்த இளைஞர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து விடுகிறது இந்தக் கடன் தொல்லை. ஏனெனில் படித்தவுடன் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது படிப்புக்கேற்ற வேலையாக இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்நிலையில், கல்விக் கடனும் சுமையாக மாறி விடுகிறது. ஒருபுறம் வேலையின்மை; மறுபுறம் கல்விக் கடனை அடைக்கப் சொல்லி வங்கியில் இருந்து தரப்படும் அழுத்தம்; இவையிரண்டையும் சமாளித்து இளைஞர்கள் முன்னேறி வருவதற்குள் சில ஆண்டுகள் கடந்து விடும்.

கல்விக் கடனால் ஏற்படும் சுமையைக் குறைக்க நீங்கள் விரும்பினால், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி நேரிடும். இன்றைய காலகட்டத்தில் தகுதியான வேலை கிடைப்பதே அரிது. இதில் கல்விக் கடனையும் அடைக்க வேண்டுமெனில், திட்டமிடுதல் தான் முதன்மைச் செயலாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் கல்வி:

வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் படிப்புகளைத் தேர்வு செய்வதை தவிர்ப்பது நல்லது. அதோடு தரம் குறைந்த கல்வி நிறுவனங்களையும் தேர்வு செய்யக் கூடாது. நம்முடைய தேர்வில் நாம் கவனமுடன் செயல்பட்டாலே, வருங்காலத்தில் பாதி கவலையைத் தவிர்த்து விடலாம். கல்வி மற்றும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, கல்விக் கடன் வாங்கும் போது முடிந்தவரையில் குறைந்தபட்ச தொகையை கடனாக வாங்க முயல வேண்டும். கடன் தொகை அதிகமாகும் பட்சத்தில், கல்லூரி படிப்பு முடிந்ததும் அதிக வட்டித் தொகை சேர வாய்ப்புள்ளது.

திட்டமிடல்:

கல்விக் கடன் தேவை என்றால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும் கடன் வசதியை சரியாகத் திட்டமிடுதல் வேண்டும். நிதி ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலமும், தேவைக்கு ஏற்ப திட்டமிடுவதன் மூலமும் கல்விக் கடன் சுமையாக மாறுவதைத் தடுக்க முடியும்.

ஆய்வு மேற்கொள்ளுங்கள்:

கல்வி மற்றும் நிறுவனத்தை பொறுமையாக சிந்தித்து தேர்ந்தெடுப்பது போலவே, கல்விக் கடன் தொடர்பான ஒப்பந்த விவரங்கள், விசா செயல்முறை, அன்னிய செலாவணி அம்சம் மற்றும் தங்குமிட செலவு ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கடன் வசதியை எளிதாக்கும் ULI அம்சம்!
Financial Burden

நிதி நெருக்கடி:

படிப்பை முடித்தவுடன் நிச்சயமாக பலரும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள். ஆகையால், கூடிய விரைவில் கல்விக் கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தும் வழியைக் கண்டறிய வேண்டும். வேலை கிடைக்க தாமதமாகும் பட்சத்தில், பகுதி நேர வேலைக்குச் சென்று குறைந்த அளவு தொகையை செலுத்துவது நல்லது. வேலை கிடைத்தவுடன் மாதத் தவணையை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு:

கடன் தொகையை செலுத்தாமல் போனால், முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் வருங்காலத்தில் வேறு ஏதேனும் கடன் பெற முடியாத சூழல் உருவாகலாம். மேலும் வங்கிகள் சார்பில் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதால், மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்வீர்கள் என்பதால், சிந்தித்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com