Electronic Clearing Service (ECS) - மின்னணுவியல் தீர்க்கும் சேவை... அருமையான திட்டம்!

Electronic Clearing Service
Electronic Clearing Service
Published on

உங்களது மாதாந்திர செலவுகளைச் செலுத்த மாதாந்திரம் ECS முறையை பயன்படுத்துகிறீர்களா? அது என்ன சார், ECS? இந்தப் பதிவு உங்களுக்கு அதைப் பற்றி விரிவாக சொல்லும். 

Electronic Clearing Service (ECS) - மின்னணுவியல் தீர்க்கும் சேவை:

இந்த மின்னணுவியல் தீர்க்கும் சேவை (Electronic Clearing Service - ECS - ஈசிஎஸ்) என்பது குறிப்பிட்ட காலவரையறையில் திரும்ப திரும்ப செய்யப்படும் மின்னணுவியல் வழியான பணப்பரிவர்த்தனைகளைக் குறிக்கும். இந‍்தப் பணப்பரிவர்த்தனைகள் பற்று (credit) அல்லது கடன் (debit) என இருக்கலாம். மொத்தமாக பல வங்கிக் கணக்குகளுக்கு பற்று வைக்கவோ (சம்பளம் வழங்குதல், ஈவுத் தொகை வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், வட்டி வழங்குதல் போன்றவை) அல்லது மொத்தமாக பல வங்கிக் கணக்குகளிலிருந்து கடன் வசூலிக்கவோ (மின்சாரக் கட்டணம், கடன் தவணை, கைப்பேசி இணைப்புக் கட்டணம், பரஸ்பர நிதி முதலீடு, காப்பீட்டுத் தவணை போன்றவை) ஈசிஎஸ் ஆனது நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

அடிப்படையில், இங்கு பணமானது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு இடம் பெயர்கிறது அல்லது பல்வேறு வங்கிக்கணக்குகளிலிருந்து ஒரு வங்கிக் கணக்கிற்கு இடம் பெயர்கிறது. இந்த ஈசிஎஸ் பரிவர்த்தனைகள் இந்திய தேசிய பரிவர்த்தனை நிறுவனத்தின் (National Payment Corporation of India) கீழ் வரும், தேசிய தானியங்கி தீர்ப்பாய இல்லத்தின் (National Automated Clearing House) வழியாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்த ஈசிஎஸ் பரிவர்த்தனைகள் இரண்டு வகைப்படும்.

  1. ஈசிஎஸ் பற்று பரிவர்த்தனைகள் (ECS CREDIT) - பலருக்கு பணத்தைப் பற்று வைக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன

  2. ஈசிஎஸ் கடன் பரிவர்த்தனைகள் (ECS DEBIT) - பலரிடமிருந்து கடனை வசூலிக்க, நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஈசிஎஸ் தீர்ப்பாய நிறுவனங்களில் பல வகைகள் உள்ளன. இவை இத்தகைய பணப் பரிவர்த்தனைகளை செயல்படுத்துகின்றன. இவை கணினி மயமாக்கப்பட்ட வங்கிகளின் சௌகரியங்களை முடிந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளும்.

  1. உள்ளூர் தீர்ப்பாய நிறுவனங்கள் (Local ECS) - இத்தகைய தீர்ப்பாயங்கள் 81 உள்ளன.

  2. பிராந்திய தீர்ப்பாய நிறுவனங்கள் (Regional ECS) - இத்தகைய தீர்ப்பாயங்கள் 9 உள்ளன.

  3. தேசிய தீர்ப்பாய நிறுவனம் (National ECS) - இது மும்பையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் எவ்வாறு பயன் பெறலாம்?
Electronic Clearing Service

இத்தகைய ஈசிஎஸ் பரிவர்த்தனைகளில் பல நன்மைகள் உள்ளன.

  1. பணம் குறுகிய காலத்தில் வங்கிக் கணக்கில் சேர்கிறது.

  2. பணத்தை தனியாக வழங்கி பற்று வைக்க வேண்டிய அவசியமில்லை. பணம் வங்கிக் கணக்குகளுக்கிடையே எளிமையாக மின்னணுவியில் முறையில் பட்டுவாடா செய்யப்படுகிறது.

  3. பணம் திருட்டுப் போகும் வாய்ப்பில்லை. ஏனென்றால், அது பணமாக எடுத்துச் செல்லப்படவில்லை. அது மின்னணுவியல் முறையில் பட்டுவாடா செய்யப்படுகிறது.

  4. வங்கி ஊழியர்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் நேரம் மிச்சமாகிறது.

  5. இதற்குத் தனியாக பயனாளிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட வங்கிகள் இதற்கு சில பைசாக்களை (25 பைசா, 50 பைசா) மட்டும் செலவழிப்பதால், சிக்கனமான திட்டம்.

இதையும் படியுங்கள்:
ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் பென்சன்: LIC நியூ ஜீவன் சாந்தி திட்டம்!
Electronic Clearing Service

இப்போது உங்களது மாதாந்திர தவணைகளை (உதாரணமாக, மாதாந்திர வீட்டுக் கடன் தவணை, வாகனக் கடன் தவணை, கைப்பேசிக் கட்டணம் போன்றவை) ஈசிஎஸ் முறையில் எப்படி செலுத்துவதெனப் பார்ப்போம்.

மாதாந்திர கடன் பாக்கித் தொகையை, கடனாளியின் வங்கிக் கணக்கிலிருந்து , வசூலிக்கும் நிறுவனம் குறிப்பிட்டத் தேதியில் ஈசிஎஸ் முறையில் வசூலிக்கும். இதற்கான ஒப்புதல் ஏற்கனவே கடனாளியால் வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம், கடன் பாக்கித் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்த முடிகிறது. தாமதமாக செலுத்துவதால் வரும் அபராதத் தொகையைத் தவிர்க்க முடிகிறது.

நீங்கள் இதுவரை உங்களது மாதாந்திர செலவுகளுக்கு ஈசிஎஸ் முறையை பின்பற்றவில்லையென்றால், கடன் வழங்கிய சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவொரு அருமையான திட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com