Emergency Funds: அவசரகால நிதியின் முக்கியத்துவங்கள்!

Emergency Funds
Emergency Funds: Why Every Common Man Needs One

வாழ்க்கை என்பது நம்மால் கணிக்க முடியாத தன்மை கொண்டதாகும். எதிர்பாராத நிகழ்வுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். குறிப்பாக அத்தகைய நிகழ்வுகள் நமக்கு பணத்தேவையும் கொண்டு வரும் என்பதால், ஒவ்வொரு சாமானிய மனிதனும் அவசர காலத்திற்கு உதவும்படி ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவசரகால நிதியின் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.

அவசரநிலைகள்: வேலை இழப்பு, மருத்துவத் தேவை, வீடு பழுதுபார்ப்பு அல்லது கார் விபத்துக்கள் போன்ற பல்வேறு விதமான அவசர நிலைகள் உள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் நம் உடனடியாக செயல்பட வேண்டும் என்பதால், ஒரு தனிநபர் அல்லது குடும்பங்கள் மீது குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை இவை ஏற்படுத்தலாம். அவசரகால நிதி இல்லாமல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது, அதிக வட்டியில் கடன்கள் வாங்குவது அல்லது மற்ற நோக்கங்களுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை இத்தகைய அவசரநிலைகள் குறைக்கும் வாய்ப்புள்ளது. இது நீண்ட கால கடன், மன அழுத்தம் மற்றும் மோசமான நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். 

அவசரகால நிதியின் நோக்கம்: அவசரகால நிதியானது ஒருவரின் ஒட்டுமொத்த நிதி நிலையை சீர்குலைக்காமல், எதிர்பாராத சூழ்நிலைகளைக் கையாள ஒரு சிறந்த பாதுகாப்பாக செயல்படுகிறது. மருத்துவக் கட்டணங்கள், வாடகை, விபத்து செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளை ஈடு செய்யவே அவசரகால நிதிகள் உதவுகின்றன. எனவே குறிப்பிட்ட நிதியை அவசர காலத்திற்காக நாம் வைத்திருப்பது, இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு நிச்சயம் உதவலாம். 

அவசரகால நிதியை எப்படி சேமிப்பது? 

  • அவசர கால நிதியை சேமிப்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தேவை. குறிப்பாக அதற்காக நீங்கள் எவ்வளவு ஒதுக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கவும். குறைந்தபட்சம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரையிலான வாழ்க்கைச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை சேமிக்க வேண்டும். இருப்பினும் உங்களது தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் சரியான தொகையை சேமிப்பது நல்லது. 

  • உங்களது வருமானம் மற்றும் செலவுகளை மதிப்பாய்வு செய்து, எங்கெல்லாம் பணம் செலவு செய்வதைக் குறைக்க முடியுமோ அவற்றைக் கண்டறிந்து கூடுதல் பணத்தை சேமிக்கவும். உங்கள் வருவாயில் ஒரு பகுதியை அவசரகால நிதிக்காக ஒதுக்குங்கள். 

  • அவசரகால நிதியாக பணத்தை ஒதுக்குவதை தானியங்கிப் படுத்துங்கள். இது நீங்கள் பணத்தை செலவு செய்கிறீர்கள் என்ற மனநிலையை உங்களுக்கு ஏற்படுத்தாது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் தலையிட்டு பணத்தை சேமிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களது வங்கிக் கணக்குக்கு பணம் வந்ததும் தானாகவே ஒரு குறிப்பிட்ட தொகை நீங்கள் சேமிக்க விரும்பும் கணக்குக்கு செல்லும்படி செய்யுங்கள். 

  • உங்களிடம் ஏற்கனவே கடன்கள் நிலுவையில் இருந்தால், அவசரகால நிதியை ஒதுக்குவதற்கும் கடனை செலுத்துவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தவும். அவசரகால நிதியை சேமிக்கும் அதே நேரத்தில், அதிக வட்டியுடைய கடனை செலுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள். 

  • அவசரகால நிதியாக நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை உடனடியாக அணுகக்கூடியதாக வைத்திருக்கவும். இதற்கான ஒரு தனி சேமிப்பு கணக்கு அல்லது லிக்விட் பண்ட் போன்றவற்றில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக அவசர நேரத்தில் உடனடியாக பணத்தை எடுத்து பயன்படுத்த உதவியாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
இந்த காய்கறிகளை தயவு செய்து இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்… மீறி சாப்பிட்டா? 
Emergency Funds

இந்த வழிகளைப் பின்பற்றி, அனைவருமே உங்களுக்கான அவசரகால நிதியை சேமிக்க முடியும். இதுவரை நீங்கள் பணம் சேமிக்காத நபராக இருந்தாலும், உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பணத்தை சேமிக்க முற்படுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com