வாழ்க்கை நிகழ்வுகளுக்கான பணத்தை சேமிப்பதற்கான வழிகள்!

Kadhu Kuthu
Financial Planning for Life Events

வாழ்க்கை என்பது பல உற்சாகமான தருணங்கள் மற்றும் பல திடீர் மாற்றங்கள் நிறைந்தது. எனவே பிறந்தநாள், காதுகுத்து, வளைகாப்பு போன்ற வாழ்க்கை நிகழ்வுகளுக்கு பணம் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஆகும் செலவுகளையும் முன்கூட்டியே சேமிப்பது என்பது பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும். எனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பணத்தை சேமிப்பதற்கான வழிகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

பிறந்தநாள் மற்றும் விடுமுறை நாட்களுக்கான சேமிப்பு: பிறந்தநாள் மற்றும் விடுமுறை நாட்கள் என்பது நம் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடும் மகிழ்ச்சிகரமான நாட்களாகும். இந்த விசேஷ நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கத் தொடங்குவது நல்லது. இதற்காக ஒவ்வொரு மாதமும் சிறிதளவு பணத்தை ஒதுக்குவதன் மூலம், அந்தத் தருணத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை நாம் எளிதாக கையாள முடியும். 

கல்விக்கான திட்டமிடல்: கல்வி என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது. பள்ளி, கல்லூரி, மேற்படிப்பு என எல்லா விதமான கல்விகளுக்கும் பணம் மிகவும் முக்கியமானது. எனவே ஒவ்வொருவரும் தங்களின் கல்வி அல்லது குடும்ப நபர்களின் கல்விக்காக பணத்தை சேமிப்பது நல்லது. இதன் மூலமாக பள்ளிக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் பிற கல்வி செலவுகளுக்கு எவ்விதமான நெருக்கடியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். 

பெரிய கனவுகளுக்கான சேமிப்பு: நாம் அனைவருக்குமே வாழ்க்கையில் எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று பெரிய கனவுகள் இருக்கும். உலகம் முழுவதும் பயணம் செய்வது, தொழில் தொடங்குவது அல்லது ஏதாவது ஒரு சிறப்புமிக்க பொருளை வாங்குவது என எதுவாக இருந்தாலும் இப்போதிலிருந்து பணத்தை சேமிப்பது உங்களது கனவுகளை நனவாக்க உதவும். எனவே உங்களது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களது கனவுகளுக்காக சேமிப்பது தவறில்லை. 

அவசரகால நிதி: அவசரகால நிதி என்பது எதிர்பாராமல் உங்களுக்கு ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்ய பெரிதளவில் உதவும். அதாவது விபத்து, திடீர் மருத்துவ செலவுகள் போன்றவை உங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொரு மாதமும் சிறிதளவு பணத்தை, அவசரகால நிதிக்காக ஒதுக்கி வையுங்கள்.

எதிர்கால திட்டமிடல்: முதுமை என்பதை யாராலும் தடுக்க முடியாது. எனவே நமது ஓய்வு காலத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். நீங்கள் தற்போது இளமைப் நீண்ட காலம் இருக்கிறது என நினைக்கலாம், ஆனால் இப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமிப்பது, உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
மைதா உணவுகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டா? 
Kadhu Kuthu

இத்தகைய வாழ்க்கை நிகழ்வுகளுக்கான சேமிப்பு திட்டமிடல் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். இது உங்களை எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் இருக்கச் செய்யும். இதுபோன்ற சேமிப்புகளுக்குப் போக மீத பணத்தை செலவு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களது நிதி நிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com