ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக களைகட்டியிருக்கும் சென்னை.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதார நடவடிக்கை கொண்ட மாநிலமாக மாற்ற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் 32 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் முதலீடுகளை கவரும் வண்ணம் பல்வேறு வகையான சலுகைகள், பாதுகாப்புகள், போக்குவரத்துகள் மற்றும் தமிழ்நாட்டில் சிறப்பு, நிலப்பகுதி போன்றவை குறித்து முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் முதலீட்டாளர்களை வரவேற்கும் வண்ணம் சென்னை முழுவதும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா தளங்கள் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன. ஏர்போர்ட் முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரை சாலையின் இருமருங்கிலும் மாநாட்டு இலட்சினையும் மற்றும் தமிழ்நாடு சிறப்பு சம்பந்தமான புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சென்னை முழுவதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக சென்னை விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக சென்னை முழுவதும் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பெருவாரியான 5 நட்சத்திர விடுதிகளின் அறைகள் தற்பொழுதே புக் செய்யப்பட்டு விட்டன.