வெங்காயத்தை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யும் அரசு: விவசாயிகள் மகிழ்ச்சி!

வெங்காயத்தை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யும் அரசு: விவசாயிகள் மகிழ்ச்சி!

வெங்காய தட்டுப்பாடு நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வரக்கூடிய நிலையில் ஒன்றிய அரசு வெங்காயத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து 2410 ரூபாய்க்கு கூடுதலாக கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெங்காயத்தினுடைய விளைச்சல் குறைந்து இருக்கிறது. நடப்பு பருவத்தில் காரீஃப் பருவத்தில் வெங்காயத்துடைய விளைச்சல் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது, நாட்டினுடைய வெங்காய கையிருப்பும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

இதை அடுத்து உள்நாட்டில் வெங்காயத்தினுடைய விலை அதிகரிக்க தொடங்கியது. இதை தடுக்கும் விதமாகவும் உள்நாட்டு கையிருப்பை கூடுதல் படுத்தவும் ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன்பு வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஏற்றுமதி குறைக்கப்பட்டு உள்நாட்டு கையிருப்பு கூடுதல் அடையும் என்று கூறப்பட்டது. அதே நேரம் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய விளைச்சல் மையமாக உள்ள மகாராஷ்டிராவில் வெங்காயத்தை பயிர் செய்துள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, தீவிர போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கினர்.

இதை அடுத்து தற்போது ஒன்றிய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிரா விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவர் தெரிவித்து இருப்பது, நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெங்காயம் கையிருப்பு 3 லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது நுகர்வோர் நலனை கருதி எடுக்கப்பட்ட முடிவு.

அதேநேரம் ஏற்றுமதி செய்யும் பொழுது விவசாயிகள் அதிக பயனடைந்ததாக தெரிவிக்கின்றனர். அதை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஏற்றுமதி செய்யும் போது கிடைக்கக்கூடிய தொகையை விட கூடுதலான தொகைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஏற்றுமதி செய்யும் பொழுது கிடைக்கும் தொகையை விட 2,410 ரூபாய் கூடுதலாக கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் தற்போது வெங்காய அறுவடை தொடங்கி இருக்கிறது.

அதனால் தற்போது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைகளின் வழியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளும் பயனடைவர், நுகர்வோரும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவர் என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com