இந்திய சேவை துறை 2023 ஆம் ஆண்டு நம்பிக்கை அளிக்கும் வளர்ச்சியை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, உலகில் வளர்ந்த நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. அதேசமயம் இந்த இக்கட்டான சூழலில் இருந்து இந்தியா தப்பித்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்தியாவின் சீரான பொருளாதார செயல்பாடு, நம்பிக்கை, அரசியல் சூழல், மக்கள் தொகை, போக்குவரத்து முக்கிய காரணியாக இருந்திருக்கின்றன.
மேலும் துறைவாரியாக பார்க்கும் பொழுது இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு சேவைத்துறை முக்கிய பங்காற்றுகிறது என்று எஸ் & பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் தெரிவித்திருக்கிறது.
எஸ் & பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் இது குறித்து வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பது. இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் துறையாக சேவை துறை விளங்குகிறது. சேவை துறை பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், அதனுடைய சந்தை குறியீட்டு எண் பிஎம்ஐ 50 க்கு மேலாக இருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. அதே சமயம் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் முந்தைய 12 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவை கண்டு இருக்கிறது.
2023 ஆம் ஆண்டில் சேவை துறையின் குறியீட்டு எண் பிஎம்ஐ ஜனவரி மாதம் 57.2 ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 59.9 ஆகவும், மார்ச் மாதத்தில் 57.8, பிப்ரவரி மாதத்தில் 62.0, மே மாதத்தில் 61.2, ஜூன் மாதத்தில் 58.5, ஜூலை மாதத்தில் 62.3, அக்டோபர் மாதத்தில் 60.1, செப்டம்பர் மாதத்தில் 61, அக்டோபர் மாதத்தில் 58.4 என்று கடந்த 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேவை துறை வளர்ச்சியை கண்டறிகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவை கண்டு 56.9 என்ற நிலையில் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சேவை துறை நம்பகமான நடவடிக்கையாக மாறி இருக்கிறது.