ஒரு அக்கவுண்ட் மட்டும் வைத்திருப்பது ஆபத்தா?

Bank account
Bank account
Published on

இன்றைய டிஜிட்டல் உலகிலும் இந்தியாவில் இருக்கும் பலரும் ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் அரசுத்துறையின் 12 வங்கிகள் இயங்குகின்றன. நாட்டில் மொத்தமாக 21 தனியார் வங்கிகள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் 11 சிறு வங்கிகளும் உள்ளன.100 க்கும் மேற்பட்ட பல வங்கிகளை தேசிய வங்கிகளிடம் நிதி அமைச்சகம் இணைத்துள்ளது. 

ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்திருப்பதால் சில சிக்கல்கள் உண்டு. சில நேரங்களில் உங்கள் கணக்குள்ள வங்கியின் சர்வர் செயலிழந்து போனாலோ, பராமரிப்பு நேரங்களிலோ பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படும். சாதாரண நேரங்களில் பரவாயில்லை. அது ஒரு அவசர கால சூழலாக இருந்தால் நிச்சயம் தடுமாற்றத்தையும் சிக்கலையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் யாரிடமும் கடனாக பணம் கேட்க முடியாது. அவர் UPI மூலம் பணம் அனுப்பினாலும் உங்களுக்கு வராது. சில நேரங்களில் பணம் அவரது கணக்கில் இருந்து வெளியாகி உங்கள் கணக்கில் வராமல் நடுவிலே நிற்கும். மீண்டும் அவரது கணக்கிற்கு பணம் திரும்பி விடும். ஆனாலும் அதற்கு எடுக்கும் நேரம் தாமதம் ஆனால், அது மன உளைச்சலை தரும். நேரில் பார்த்து ரொக்கமாக வாங்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

சர்வர் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் உண்டு. அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் அளவுக்கு அதிகமாக நடைபெறும் போது அவர்களின் சர்வர்களில் அதிக டிராபிக் காரணமாக ஜாம் ஆகிவிடும். அதனால் வெப்சைட்கள் அப்படியே உறைந்து விடுகின்றன. இதனால் பணப் பரிவர்த்தனைகள் தேங்கி விடுகின்றன. பெரும்பாலும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சில அரசு வங்கிகளிலும் சில தனியார் வங்கிகளிலும் இவ்வாறு நடைபெறுகிறது. இதில் அரசு, தனியார் என்ற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை. அந்த நேரத்தில் நீங்கள் வங்கியில் பணத்தினை டெபாசிட் செய்யவோ எடுக்க முடியாது. வெட்டியாக நேரத்தினை கழிக்க வேண்டி இருக்கும். வங்கி ஊழியர்களுக்கும் அது எப்போது சரியாகும் என்று தெரியாது. அது ஐடி நெட்வொர்க் குழு கைகளில் தான் உள்ளது .

இதையும் படியுங்கள்:
சில்லறை முதலீட்டாளர்களே - உங்களுக்கான 5 டிப்ஸ் இதோ!
Bank account

இதை தடுக்க என்ன செய்யலாம்? 

அரசு வங்கிகளில் அதிக வசதிக் கொண்ட ஒரு வங்கியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சர்வர் பிரச்சனை வராத வங்கியாக அது இருக்க வேண்டும். பல அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் வசதிகளை வழங்குகின்றன. அரசு ஊழியர்கள் சம்பளக் கணக்குகள் அதிகம் உள்ள வங்கிகளில் சேவைகள் நன்றாக இருக்கும். உங்களின் ஒரு வங்கிக் கணக்கு எப்போதும் அரசு வங்கியில் இருக்க வேண்டும். இதில் எப்போதும் அதிக பணத்தினை சேமித்து வையுங்கள்.

இன்னொரு கணக்கு கட்டாயம் தனியார் வங்கியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் முன்னிலையில் உள்ள தனியார் வங்கியை தேர்ந்தெடுப்பது தான் சிறப்பாக இருக்கும். அதிக வாடிக்கையாளர் உள்ள தனியார் வங்கியில் சேவைகள் சிறப்பாக உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த வங்கியில் குறைந்த பட்ச வைப்புத் தொகை அதிகமாக இருக்கலாம். இந்த வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் சிறப்பாக இருக்கும். உங்களின் பணப்பரிவர்த்தனை அதிகமாக  உள்ள பட்சத்தில் உங்களுக்கு அவர்களே எந்த டாக்குமெண்ட்டும் இல்லாமல் கடன் வழங்க முன்வருவார்கள். 

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் ஏற்றத் தாழ்வு மிக்க பொருளாதாரம் இருப்பது ஏன்? காரணம் என்ன?
Bank account

தனியார் வங்கியில் இரண்டாம் தர வங்கிகளில் கணக்கு வைக்க வேண்டாம். அவர்கள் நிறைய பணம் பிடித்தம் செய்வார்கள் அடிக்கடி இன்சூரன்ஸ் போட சொல்லி தொல்லை தருவார்கள். முன்னணி வங்கி அல்லது RBI கட்டுப்பாட்டில் உள்ள நீண்ட கால பாரம்பரிய தனியார் வங்கியை தேர்வு செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளை உங்கள் கணக்கு உள்ள வங்கியில் இல்லாமல் வேறு வேறு வங்கிகளில் திறந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com