தங்க நகைக் கடனில் இருக்கும் நன்மைகள் இதோ!

Gold jewelry Loan
Gold jewelry Loan
Published on

நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தங்கம் வாங்குவது, நமது அவசர காலத்தில் பேருதவியாக இருக்கிறது. அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு‌.

அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமெனில் அனைவருக்கும் தோன்றுவது வங்கிகளில் கடன் வாங்கலாம் என்பது தான். கடன் வாங்குதில் வட்டி விகிதம் எவ்வளவு என்பதைத் தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். வங்கியில் தனிநபர் கடன், தொழில் கடன், கல்விக் கடன், சொத்து மீதான அடமானக் கடன், வாகனக் கடன், தங்க நகைக்கடன் மற்றும் பல்வேறு பெயர்களில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவசரத் தேவைக்கு மிகச் சிறந்தது தங்க நகைக் கடன் தான். ஏனெனில், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் போன்ற சில கடன்களைப் பெற நாம் சில ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், கடன் கிடைக்க சற்று தாமதமாகும்.

தங்க நகைக் கடனை வாங்குவதற்கு ஒரு நாளே போதுமானது. ஏனெனில் பிணயமாக நாம் தங்கத்தை வைக்கிறோம் அல்லவா! ஆகையால் தான் பலரும் அவசரத் தேவை என்றால், உடனே தங்க நகைக் கடனை நாடுகின்றனர்.

விரைவான அணுகல்:

தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கு வெகு விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்கப்படுகிறது. எங்கும் அலைய வேண்டியதில்லை என்பதாலும், விரைவான அணுகலைப் பெற முடியும் என்பதாலும் பலரும் தங்க நகைக் கடனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குறைந்த வட்டி விகிதம்:

மற்ற கடன்களை விடவும் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகும். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப வட்டி விகிதம் மாறினாலும், அந்தந்த வங்கிகளில் வட்டி விகிதம் இந்தக் கடனுக்குத் தான் குறைவாக இருக்கும். மேலும், நகைக் கடனில் கிடைக்கும் தொகையை நாம் எந்தக் காரணத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கம் மற்றும் வெள்ளி நகை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்! 
Gold jewelry Loan

சிறந்த முதலீடு:

பணம் இருக்கும் போது தங்க நகைகளை வாங்கி முதலீடு செய்வதால், நமது அவசரத்திற்கு யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது. தங்கம் கையில் இருக்கும் போது, நாம் அதிக வட்டிக்கு வெளியாட்களிடம் கடன் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. தங்கத்தை வாங்குவதன் மூலம் நமக்கு வருமானம் ஏதுமில்லை எனினும், ஆபத்பாந்தவனாக உதவுவது இந்தத் தங்கம் தான்.

காப்பீடு வசதி:

தங்க நகைக் கடனில் நமது நகைகள் அனைதும் வங்கியில் பத்திரமாக இருக்கும். வங்கிகளில் ஏதேனும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து நமது நகை திருடு போனால் கூட, நகைகளை மீட்டெடுக்க காப்பீடு வசதி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com