Term Insurance எடுக்க போறீங்களா.. அப்போ இந்த 14 ஆலோசனைகள் உங்களுக்குதான்!

Term Insurance
Term Insurance
Published on

னி மனித நிதியில் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று முதலீடு - சேமித்த பணத்தைப் பெருக்குவது (multiplication) இரண்டாவது காப்பீடு - சேமித்த பணத்தைக் காப்பது (protection) காப்பீட்டையும் முதலீட்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.

இவற்றின் குறிக்கோள்கள் வேறு வேறு. காப்பீட்டில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஆயுள் காப்பீடு முக்கியமானது. வீட்டில் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டால், ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகை வழங்கி, குடும்பத்தின் நிதி நிலையை காக்கிறது. ஆயுள் காப்பீட்டில் காலவரையுள்ள காப்பீட்டுத் திட்டம் (Term insurance) சிறப்பானது. இதில், காப்பீட்டுத் தவணை குறைவு.

காலவரையுள்ள காப்பீட்டுத் திட்டம் எடுக்க நலமான 14 ஆலோசனைக் குறிப்புகள் இதோ..

  1. வருடாந்திர பணம் ஈட்டுவதைப் போல், குறைந்தபட்சம் 15 - 20 மடங்கு காப்பீட்டுத்தொகை எடுத்துக் கொள்ளுதல் நலம். திருமணமாகி குழந்தைகள் எதிர்கால படிப்பு, வீட்டுக் கடன், ஏற்கனவே உள்ள சில கடன்கள் போன்றவை இருக்கும் பட்சத்தில், 20 -25 மடங்கு எடுத்துக் கொள்வது நலம்.

  2. எந்த வயதில் குழந்தைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிடுவார்களோ, அவர்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வார்களோ அந்த வயதுவரை காலவரையறை எடுத்துக் கொள்வது நலம். அல்லது ஓய்வு காலம் வரை வைத்திருப்பது நலம்.

  3. காப்பீட்டினை வாங்கும் போது, காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கை நிறைவேற்றும் விகிதத்தினைக் (Claim Settlement Ratio) கொண்டு வாங்குவது நலம்.

  4. காப்பீடு எடுக்கும் போது, எல்லா உண்மைகளையும் சரிவரக் கூறுதல் நலம்.

  5. 1 கோடியைத் தாண்டிய, அதிக காப்பீட்டுத் தொகையெனில், ஒரு நிறுவனம் மட்டுமில்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் எடுப்பது நலம்.

  6. காப்பீட்டினை நேரடியாக நிறுவனத்திடமிருந்து இணையத்தில் வாங்குதல் நலம். அவற்றில் தவணைத் தொகை குறைவு.

  7. காப்பீட்டுத் திட்டத்தினை இளைய வயதிலேயே எடுப்பது நலம். வயது அதிகரிக்க அதிகரிக்க காப்பீட்டுத் தவணைத் தொகை அதிகரிக்கும்.

  8. காப்பீட்டுத் தவணையினை வருடா வருடம் மறக்காமல் செலுத்தி விடுவது நலம். இல்லையேல், மறுபடி புதிய காப்பீடு எடுக்க வேண்டி வரும்.

  9. பல்வேறு காப்பீடு நிறுவனங்களை ஒப்பிட்டு, எந்த காப்பீட்டு நிறுவனம் நல்லதொரு காப்பீட்டுத் தவணை வழங்குகிறது என்று பார்த்து வாங்குதல் நலம். இதற்கு பாலிசி பஜார்(policybazaar) போன்ற இணையதளங்கள் உள்ளன.

  10. மருத்துவ காப்பீடு சார்ந்த அதிகப்படியான விடயங்களை (Riders) , காலவரையறை காப்பீட்டுடன் சேர்த்தலை தவிர்த்தல் நலம். அதன் காரணமாக, காப்பீட்டுத் தவணை அதிகரிக்கும்.கண்டிப்பாக தேவைப்படுமெனத் தோன்றினால் எடுத்துக் கொள்ளலாம்.

  11. காப்பீட்டுக் கோரிக்கை எழுப்பும் போது, பணத்தை மொத்தமாக பெறுவதைப் போல்(lump sum) காப்பீடு எடுப்பது நலம். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, திடீரென்று கிடைக்கும் அதிக பணத்தை கையாளும் திறன் இல்லாத பட்சத்தில், அவ்வப்போது கிடைக்குமாறும் செய்து கொள்ளலாம்.

  12. எதிர்காலத்தில், குடும்பத்தின் நிதி தேவை அதிகரித்தால், அதிக காப்பீட்டுத் தொகைக்கு மாறிக் கொள்வது நலம். உதாரணமாக, திருமணம் ஆன பின்னர்.

  13. எந்த ஒரு முதலீட்டினையும் சேர்த்துக் கொள்ளாமல், வெறும் காலவரையறை காப்பீட்டுத் திட்டத்தினை எடுப்பது நலம்.

  14. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உயிலினைத் தயாரித்து வைத்துக் கொள்ளுதல் நலம்.

காலவரையுள்ள காப்பீட்டுத் திட்டத்தினைப் பயன்படுத்தி குடும்பத்தின் எதிர்காலத்தினை காத்துக் கொள்வோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com