ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை சரிவு!

two wheeler
two wheeler
Published on

ந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தினுடைய விற்பனை ஜூலை மாதத்தில் 12 சதவீதம் குறைந்து இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினுடைய முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. மேலும் உள்நாட்டு சந்தையிலும் மிகப் பிரதான இருசக்கர வாகன நிறுவனமாக திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், இந்தியாவின் சில பகுதிகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் உடைய உள்நாட்டு விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 12 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 580 என்ற அளவில் இருந்த விற்பனை, 2023 ஜூலை மாதத்தில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 310 ஆக குறைந்துள்ளது. மேலும் ஹீரோ மோட்டார்கார்ப்யின் மொத்த உள்நாட்டு விற்பனை 2022 ஜூலை மாதத்தில் 4,30 684 ஆக இருந்தது. அதே சமயம் 2023 ஜூலை மாதத்தில் மொத்த உள்நாட்டு விற்பனை 3,71,204 ஆக குறைந்துள்ளது.

இந்த விற்பனை குறைவிற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்களினுடைய செலவு அதிகரித்ததன் காரணமாக, இருசக்கர வாகனங்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.அதேசமயம் ஏற்றுமதியில் 2022 ஜூலை மாதத்தில் 14, 896 ஆக இருந்த விற்பனை. கடந்த ஜூலை மாதத்தில் 20,106 ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com