ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக்!

Honda introduced new  350 cc
Honda introduced new 350 ccimgd.aeplcdn.com

ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக் நீண்ட ஆண்டு காலமாக அதிகம் விற்பனையாகும் முன்னணி பைக்காக உள்ளது. அதற்கு காரணம் அதனுடைய தோற்றமும், மேலும் அந்த பைக் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள பார்வையுமே ஆகும்.

மேலும் ராயல் என்ஃபீல்டை கவுரவமான பைக்காக இந்திய மக்கள் கருதுகின்றனர் என்பதும் அதன் விற்பனை அதிகரிக்க தனி சிறப்பாகும். இந்த நிலையில் ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனையை முறியடிக்க இந்தியாவின் முன்னணி பைக் விற்பனை நிறுவனங்கள் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனம் ராயல் என்ஃபீல்டு தோற்றத்தை போன்றே காட்சியளிக்கும் ரேட்ரே தோற்றம் கொண்ட ஹைனெஸ் சிபி 350 மற்றும் ஹைனெஸ் சிபி 350 ஆர் சி ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இவைகளில் எல் இ டி ஹைலைட் மற்றும் ஓல்டு ஸ்கூல் டிசைன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

ஹோண்டா சிபி350 பைக்கில், 20.78 பிஹெச்பி பவர் மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 348.36 சிசி ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன் பகுதியில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோண்டா சிபி350 பைக்கில் பல்வேறு வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் மற்றும் எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். DLX மற்றும் DLX PRO என மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

DLX வேரியண்ட்டின் விலை 1,99,900 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 2,17,800 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகள் உடன், ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி350 பைக் விற்பனையில் முன்னேறி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com