பணத்தை எண்ணும் நாம், அது எப்படி வழக்கத்தில் வந்தது என்று அறிந்திருக்கிறோமா?

Money
MoneyImge credit: Freepik
Published on

பணத்தை எண்ணும் நாம் அது எப்படி வழக்கத்தில் வந்தது என்பது பற்றி நினைத்து பார்த்திருக்கிறோமா? இந்திய ரூபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

இந்தியாவில் முதல் ஒரு ரூபாய் நாணயம் 1542 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுத்தமான வெள்ளியில் 179 கிராம் எடை கொண்டதாக அந்த நாணயம் தயாரிக்கப்பட்டது. ஆப்கன் மன்னர் ஷேர் ஷா ஆட்சியில் தான் அந்த முதல் நாணயம் வெளியிடப்பட்டது. முதன் முதலாக இந்திய ரூபாய் நாணயங்கள் 1757 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ந்தேதி கல்கத்தாவில் தயாரிக்கப் பட்டன்.

கிழக்கிந்திய கம்பெனி நவாப் சிராஜ்யுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாணயச்சாலை ஒன்று நிறுவப்பட்டது. நவீன முறையில் முதலாவது நாணயச்சாலை 1829 ம் வருடம் ஆகஸ்ட் 1 ம் தேதி நிறுவப்பட்டது. அப்போது அந்த நாணயச்சாலையில் தினமும் 2 லட்சம் வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன

காகிததினாலான நாணயம் 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. முதலில் பாங்க் ஆஃப் பெங்கால், பாங்க் ஆஃப் பம்பாய், மற்றும் பாங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன. ஆங்கிலேய அரசு 1861ஆம் ஆண்டு காகித நாணய சட்ட அறிமுகத்திற்கு பின் பிரிட்டிஷ் இந்திய அரசிற்கு காகித பணம் அச்சிடுவதற்கு ஏக போக உரிமை வழங்கப்பட்ட பின்னர் இது நடைமுறைப்படுத்தப்பட்டது

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1952 ம் ஆண்டு மார்ச் 19 ம் தேதி அலிப்பூர் நாணயச்சாலை தொடங்கியது. இங்கு ஒரு நாளைக்கு 12 லட்சம் நாணயங்கள் அச்சிடப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் ரூபாய், அணா, துட்டு என்று அழைக்கப்பட்டு வந்த இந்திய நாணயம் பின்னர் நயா பைசா என்று மாறியது. ஆகஸ்ட் 15, 1950 அன்று, "அணா தொடர்நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதுவே இந்தியக் குடியரசின் முதல் நாணயம்.

1935-ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டது. அதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது . 1938 -ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவினால் அச்சிடப்பட்ட முதல் காகித பணம் 5 ரூபாய் நோட்டு ஆகும். அது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவத்தினை கொண்டிருந்தது. அதே ஆண்டில் ரூ10 ரூ100 ரூ1000 ஆகிய ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன.

ரூபாய் தாள்கள் பிரிவில் 10,000 ரூபாய்  காகித பணத்தினை இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1947 இல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ரூபாய் நாணயத்தின் வடிவமைப்பு மாறியது. சாரநாத்தில் உள்ள லயன் கேபிடல் காகித நாணயத்திற்கான அடையாளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சுதந்திர இந்தியாவின் முதல் ரூபாய் நோட்டாக ஒரு ரூபாய் நோட்டு வெளி வந்தது

1946ஆம் ஆண்டு கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ரூ1000 மற்றும் ரூ10000 ஆகியவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இவை மீண்டும் 1954-ல் நடைமுறைக்கு வந்தன. இந்த முறை ரூ5000 ரூபாய் தாளும் அச்சிடப்பட்டது. இவை 1978-ல் மீண்டும் திரும்பி பெறப்பட்டன

தற்பொழுது ரூ10, ரூ100, ரூ500, ஆகியவை மட்டுமே அச்சிடப்படுகின்றன. ரூ1, ரூ2, ரூ5 ஆகியவை உலோகத்தினாலான காசுகளாக்கப்பட்டதால், அவை ரூபாய் நோட்டுகளாக அச்சிடுவது நிறுத்தப்பட்டது. 1994 -ஆம் ஆண்டு வரை இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது .1952 ம் ஆண்டு தான் முதன் முதலாக நிக்கல் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. காந்தி உருவம் பதித்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் 1960 ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட்டன. 1964 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி நேரு தலையுடன் கூடிய ஒரு ரூபாய், 50 பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டன

இதையும் படியுங்கள்:
தேசிய புத்தக காதலர் தினம் - ஆகஸ்ட், 09. புத்தகத்தை விட நல்ல நண்பன் உண்டோ? புத்தகம் தோன்றிய வரலாறு தெரியுமோ?
Money

தற்போது உலோக நாணயங்கள் 1, 2, 5, 10 மற்றும் 20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. 20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றனஒரு ரூபாய்க்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.

எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்கிறது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அழுக்கடைந்த நோட்டுகளை திரும்ப பெறுதல் ஆகிய காரணிகளின் அடிப்படையில், எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்யும். ஒரு ரூபாய் காசுக்கள் அடிக்கும் பொறுப்பு ஆர்பிஐயை சார்ந்ததல்ல. அது இந்திய அரசை சார்ந்தது. எனவே தான் ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதி துறை செயலாளரின் கையொப்பம் காணப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com