உங்களது காரின் மூலம் வருமானம் ஈட்ட 12 யோசனைகள்!

உங்களது காரின் மூலம் வருமானம் ஈட்ட 12 யோசனைகள்!

உங்களிடம் சொந்தமாக சிற்றுந்து உள்ளதா ? அதனைக் கொண்டு பல்வேறு வகைகளில் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதற்கு 12 யோசனைகள் பின்வருமாறு.

  1. சுற்றுலா அழைத்துச் செல்லலாம்; அருகிலுள்ள ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று சம்பாதிக்கலாம். சென்னையில் பல்வேறு வாடகை சிற்றுந்து நிறுவனங்கள்,திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா கூட்டிச் செல்கின்றன.

  2. சிற்றுந்தை வாடகைக்கு விடலாம்; பயணம் சார்ந்த நிறுவனங்களுக்கு (Travel Agency) சிற்றுந்தை வாடகைக்கு விட்டு, பணம் ஈட்டலாம்.

  3. உணவை வீடுகளுக்கு வழங்கலாம்; ஸ்விக்கி, ஜோமாடோ , பிட்சா ஹட் போன்ற உணவு வழங்கும் சேவை நிறுவனங்கள் வாயிலாக, உணவைக் கொண்டு சென்று, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி பணம் ஈட்டலாம்.

  4. சிற்றுந்து ஓட்டக் கற்றுத் தரலாம்; சிற்றுந்து ஓட்ட ஆர்வமுள்ள, ஆனால், சிற்றுந்து இல்லாத நபர்களுக்கு சிற்றுந்து ஓட்ட கற்றுக் கொடுப்பதன் மூலம், பணம் ஈட்டலாம்.

  5. இணையத்தில் வாங்கிய பொருட்களை வாடிக்கையாளருக்கு சேர்ப்பது- அமேசான், பிக் பாஸ்கெட் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு , பொருட்களை சேர்ப்பித்து, பணம் ஈட்டலாம்.

  6. ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு சிற்றுந்து ஓட்டலாம்;ஓலா, ஊபர் போன்ற வாடகை சிற்றுந்து நிறுவனங்களுக்கு, ஓட்டுநராக பதிவு செய்து, உங்களது சிற்றுந்தின் மூலம், பணம் ஈட்டலாம்.

  7. சிற்றுந்தில் விளம்பரம் செய்து பணம் ஈட்டலாம்; சிற்றுந்தில் , விளம்பரம் வைத்து, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

  8. அலுவலகம், வெளியூர் செல்லும்போது, கூட்டாக(car pool) பயணம் செய்து, பணம் ஈட்டலாம்; தனியாக பயணம் செய்வதை விட, கூட்டாக பயணம் செய்து, எரிபொருள் செலவைக் குறைக்கலாம். பணம் சேமிக்கலாம்.

  9. சிற்றுந்து பராமரிப்பு காணொலிகளைப் பதிவேற்றலாம்;யூடியுப் போன்ற இணையங்களில் சிற்றுந்து பராமரிப்பு சார்ந்த காணொலிகளை பதிவேற்றி, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

  10. பள்ளிகளுக்குக் குழந்தைகளைக் காலையும் மாலையும் கூட்டிச் சென்று வரலாம்; பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பாக கூட்டிச் சென்று பணம் ஈட்டலாம். காலையும் மாலையும் மட்டும் சிறிது நேரம் இதற்குச் செலவிட வேண்டும்.

  11. காலையில் செய்தித்தாள் போடுவது, பால் பாக்கெட் போடுவது போன்ற வேலைகளைச் செய்யலாம்- சிற்றுந்தில் அதிக இடம் இருப்பதால், அதிக அளவு கொள்முதல் செய்து, அதிக இடங்களுக்கு பால் பாக்கெட் போட முடியும்.

  12. உணவு மற்றும் பட்சணங்களை விற்கலாம் - உணவுகளை, பட்சணங்களைத் தயாரித்து, சிற்றுந்தில் கொண்டுச் சென்று, பாதுகாப்பாக உணவுகளை விற்கலாம். பணம் ஈட்டலாம்.

குறிப்பு; இவ்வாறு சொந்தச் சிற்றுந்துகளை வணிகத்திற்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்புதல் (T Permit) பெற வேண்டும்.உங்களது பணம் ஈட்டும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com