உங்களுக்கு ஜப்பானின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா? 

How to invest in japan stock market from india
How to invest in japan stock market from india

முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டின் பரவலாக்கத்தினை (diversification) அதிகரிக்க, ஒரு பங்குச் சந்தை மட்டுமல்லாது மற்ற நாடுகளின் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம். இதன் மூலம், ஏதேனும் சில காரணங்களால் ஒரு பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தாலும், மற்ற பங்குச் சந்தைகளில் உள்ள முதலீடு பாதிக்காமலிருக்கும்.

உதாரணமாக, ரஷ்யாவின் பங்குச்சந்தை ரஷ்யா-உக்ரைன் போரினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு ரஷ்யர், இந்தியா போன்ற சந்தைகளிலும் முதலீடு செய்து இருப்பின், பரவலாக்கத்தின் காரணத்தினால், அவரது முதலீடு பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்காது.

இந்தியர்களாகிய நாம், பரவலாக்கத்திற்காக இவ்வாறு வெளிநாடுகளின் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ய முடியும். இந்தக் கட்டுரையில் ஜப்பானிய பங்குச் சந்தையில் எவ்வாறு முதலீடு செய்ய முடியுமென்று பார்க்கலாம்.

ஜப்பானிய பங்குச் சந்தை 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், 1949 ஆம் ஆண்டு மே மாதம், மறுபடி புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பங்குச் சந்தையில் மின்னணு உபகரணங்களைத் தயாரிக்கும் மிட்சுபிஷி (mitsubishi) , சோனி (sony) போன்ற நிறுவனங்கள், புகைப்படக் கருவி தயாரிக்கும் நிறுவனமான கானன் (canon), வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களான சுஸூகி (suzuki), ஹோண்டா (Honda), டொயோட்டா (Toyota) போன்ற நிறுவனங்களும் பட்டியலிப்படுகின்றன. கடந்த தசாப்தங்களில் 10% லாபத்தினை இந்தப் பங்குச் சந்தை ஈட்டி வந்துள்ளது. 

ஜப்பானிய பங்குச் சந்தையில் இரண்டு விதங்களில் முதலீடு செய்யலாம்.

  1. பங்குகள் மூலம் , நேரடி பங்குச் சந்தை முதலீடு

  2. பரஸ்பர நிதிகள் மூலம், மறைமுக பங்குச் சந்தை முதலீடு

பங்குகள் மூலம், நேரடி ஜப்பானிய பங்குச் சந்தை முதலீடு;

இங்கு ஜப்பானிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் வாயிலாகவோ அல்லது பங்குச் சந்தை வாணிப நிதிகள்(Exchange traded Fund) வாயிலாகவோ, ஜப்பானிய பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது.

இதற்கு பல முறைகள் உள்ளன.

  1. ஜப்பானிய பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் வாயிலாக ; ஜப்பானிய பங்குச் சந்தை தரகு நிறுவனங்களில் நேரடியாக கணக்கு தொடங்கி, அவற்றின் வாயிலாக முதலீடு செய்யலாம். இந்தியர்கள் வெளிநாட்டில், ஒரு வருடத்திற்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யலாம். 

  2. பன்னாட்டு தரகு நிறுவனங்கள் வாயிலாக; சார்லஸ் ஸ்வாப்(charles schwab), அமேரி டிரேட்(Ameritrade) போன்ற பன்னாட்டு பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்யலாம்.

  3. ஜப்பானிய தரகு நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ள இந்திய தரகு நிறுவனங்கள் வாயிலாக; ஐசிஐசிஐ டைரக்ட்(ICICI Direct), ஹெச்டிஎப்சி செக்யூரிடீஸ்(HDFC Securities) போன்ற வெளிநாட்டுத் தரகு நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ள இந்திய தரகு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்யலாம். 

இவற்றில் சில நிறை,, குறைகள் உள்ளன.

  • நிறைகள்; பெரிய ஜப்பானிய நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு. 

  • குறைகள்; ஜப்பான் நாட்டின் பங்குச் சந்தையை, இந்தியாவிலிருந்து கணிப்பது கடினம். பணத்தை இழக்கும் அபாயம் அதிகம். தரகு கட்டணங்கள் அதிகம். 

இதையும் படியுங்கள்:
உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? இத்தனை லட்சம் கோடியா? 
How to invest in japan stock market from india

பரஸ்பர நிதிகள் மூலம், மறைமுக பங்குச் சந்தை முதலீடு இங்கு ஜப்பானிய பங்குகளில் முதலீடு செய்யும், சர்வதேச பரஸ்பர நிதிகளின் வாயிலாக, ஜப்பானிய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்வது ஜப்பானிய தரகு நிறுவனங்கள் வாயிலாக; ரக்குடன்(Rakuten securities), எஸ்பிஐ  ஷோகேன்(SBI Shoken) போன்ற ஜப்பானிய தரகு நிறுவனங்கள் இணையதளங்கள் வாயிலாக , ஜப்பானிய பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். 

ஜப்பானிய பங்குகளில் முதலீடு செய்யும் இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக; நிப்பான் இந்தியா ஜப்பான் ஈக்விடி பண்டு(Nippon India Japan Equity Fund) அல்லது ஜப்பானில் முதலீடு செய்யும் மற்ற ஏதேனும் பன்னாட்டு பரஸ்பர நிதி திட்டத்தின்(International mutual funds) வாயிலாக, முதலீடு செய்யலாம்.  இவற்றில் சில நிறை, குறைகள் உள்ளன. நிறைகள்; பரவலான முதலீடு என்பதால், பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு. மேலும், நாடுகள் தாண்டிய பரவலாக்கம் குறைகள்; வெளிநாட்டு முதலீடு என்பதால், அதிக வருமான வரி. மேலும், வெளிநாட்டில் முதலீடு செய்ய விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு(documentations and restrictions) நீங்களும் உங்களது முதலீட்டினை பரவலாக்க, ஜப்பானில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com