உக்ரைனுக்கு வழங்கிய நிதி உதவியை தடுத்த ஹங்கேரி!

Hungary and ukraine
Hungary and ukraine

ஐரோப்பிய யூனியன் உக்ரைன் நாட்டிற்கு வழங்க இருந்த நிதி உதவியை தடுத்து நிறுத்தியது ஹங்கேரி.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக போர் நிலவி வருகிறது. இதை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பொருளாதார தடை விதித்திருக்கின்றன. அதே நேரம் உக்ரைனுக்கு ஆதரவாக பொருளாதாரம் மற்றும் ஆயுத நடவடிக்கைகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் சார்பாக உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஒன்றிணைந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பில் ஐரோப்பிய யூனியன் சார்பில் 5 ஆயிரம் கோடி யூரோ நிதி உதவி செய்யும் மசோதாவை கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கான கூட்டத்தை ஹங்கேரி புறக்கணித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 192 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பத்திர பதிவுத்துறை!
Hungary and ukraine

இது குறித்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்திருப்பது, ஐரோப்பிய யூனியன் முடக்கி வைத்துள்ள ஹங்கேரிக்கு சொந்தமான நிதியை விடிவிக்கும் வரை நாங்கள் ஐரோப்பிய யூனியனுடைய செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை உறுப்பு நாடுகளில் 27 நாடுகள் சம்மதித்தால் மட்டுமே தீர்மானத்தை செயல்படுத்த முடியும். இதனால் உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் ஐரோப்பிய யூனியன் முடிவு தடைப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com