2024ல் வருமான வரி தாக்கலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!

Changes made in 2024 income tax.
Changes made in 2024 income tax.

வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சில மாற்றங்களை செய்து வெளியிட்டு இருக்கிறது.

நாட்டின் தேசிய வருவாயில் மிக முக்கிய அங்கம் வகிப்பது நேரடி வருமான வரி வசூலிப்பு முறை. ஒவ்வொரு நிதி ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி நாளாக மார்ச் 31ம் தேதி கருதப்படும். வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நேரங்களில் அதிக அளவிலான கூட்டத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

இந்த நிலையில் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நேரடி வருமான வரி ரிட்டர்ன் படிவங்களில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டு இருக்கிறது. அதையும் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெளியிட்டு இருக்கிறது. இவை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய படிவம் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 என்று இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. 50 லட்சம் வரை வருமானம், ஊதியம், வட்டி வருவாய், வேளாண் வருவாய் ஈட்டும் நபர்கள் ஐடிஆர் 1 படிவத்தை பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் செய்யலாம். 50 லட்சம் வரை தனிநபர் அல்லது நிறுவனங்கள் சம்பந்தமான தொழில்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்காக ஐடிஆர் 2 படிவம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டெஸ்லாவிற்கு இந்தியாவின் வரி சலுகை கிடையாது!
Changes made in 2024 income tax.

மேலும் இந்த படிவத்தின் மூலம் வரி செலுத்துபவர் தான் சம்பந்தமான அனைத்து வங்கி கணக்கு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com