நாட்டில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு எண்ணெயினுடைய விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இதை அடுத்து தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ளதை முன்னிட்டு சமையல் எண்ணெயினுடைய இறக்குமதி 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிற்கு தேவையான சமையல் எண்ணெயைகள் இந்தோனேசியா, ரஷ்யா, மலேசியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்பட்டதன் காரணமாக எண்ணெய் இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெயின் தட்டுப்பாடு அதிகரித்தது.
இதை அடுத்து இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் மீதான விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் அரசின் பல்வேறு முயற்சிகளை அடுத்து இந்தியாவில் சமையல் எண்ணெயினுடைய உற்பத்தி மற்றும் இறக்குமதி தற்போது அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சூரியகாந்தி, பாமாயில் போன்ற சமையல் எண்ணெய்களினுடைய இறக்குமதி 46 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருக்கிறது. கேரளாவில் ஓணம் தொடங்கி நாடு முழுவதும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு பண்டிகைகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் எண்ணெயினுடைய தேவையும் அதிகரித்து இருக்கிறது.
இவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 17.71 லட்சம் டன்னாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிடும் பொழுது 12.74 லட்சம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 46 சதவீதம் சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருக்கிறது.
இதனால் இந்தியாவில் எண்ணெயினுடைய விலை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் பண்டிகை காலத்திற்கு தேவையான எண்ணெய் கையிருப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதோடு தற்போது சுமார் 45 நாட்களுக்கு தேவையான உணவு எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.