இந்தியாவில் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவில் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு!

ந்தியாவில் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள் உற்பத்தி அதிகரித்திருப்பதாக ஒன்றிய மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் பர்ஹோந்தம் ரூபாலா தெரிவித்திருக்கிறார்.

குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய பால் தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கால்நடைகள் மூலம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. 2022 மார்ச் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பால் உற்பத்தி 4 சதவீதம் உயர்வைக் கண்டிருக்கிறது. இவ்வாறு 23.058 கோடி டன் பால் உற்பத்தி நடைபெற்று இருக்கிறது.

பால் உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் 15. 72 சதவீத பங்களிப்போடு முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 14.44 சதவீத பங்களிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் 8.73 சதவீதம் பால் உற்பத்தி செய்கிறது. குஜராத் 7.49 சதவீதமும், ஆந்திர 6.74 சதவீதமும், கர்நாடகா 8.76 சதவீதமும், மேற்குவங்கம் 6.9 சதவீதமும் பால் உற்பத்தி செய்து செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் யோகா!
இந்தியாவில் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு!

அதேபோல முட்டை உற்பத்தியில் இந்தியா 7 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. கணக்கிடப்பட்ட அதே நிதி ஆண்டில் 13, 838 கோடி டன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. முட்டை உற்பத்தியில் ஆந்திரா 20. 13 சதவீத பங்களிப்போடு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 15. 58 சதவீதம் முட்டை உற்பத்தி செய்கிறது. தெலுங்கானா 12. 727 சதவீதம், மேற்கு வங்கம் 9.74 சதவீதம், கர்நாடகா 6.51 சதவீதம் முட்டை உற்பத்தி செய்கிறது. இது மட்டுமல்லாமல் கால்நடை இறைச்சி உற்பத்தியில் 5 சதவீதம் இந்தியா வளர்ச்சி கண்டிருக்கிறது‌. 97.69 லட்சம் டன் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கம்பளி உற்பத்தியிலும் 2 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது இந்தியா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com