
இந்தியாவில் நடபாண்டில் உள்நாட்டு உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதாலும் அவ்வப்போது அளிக்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளாலும் இந்தியாவினுடைய விற்பனை நிறுவனங்கள் முன்னேற்றத்தை கண்டு இருப்பதாகவும், குறிப்பாக ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நாட்டினுடைய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களிடம் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகும், வேலைகளை எளிதாக்கவும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் விற்பனை அதிகரித்திருக்கிறது. மேலும் சலுகை காலங்களில் கூடுதல் விற்பனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையும் கணிசமான வளர்ச்சியை கண்டறிகிறது. நடப்பாண்டின் 7 மாதங்களில் 10 சதவீதம் கூடுதல் விற்பனை நடைபெற்றிருக்கிறது. இதனால் நாட்டினுடைய பொருளாதார நிலை சீரடைய விற்பனை நிறுவனங்களும் முக்கிய பங்கு வைக்கின்றன.
மேலும் நடப்பாண்டில் ஜவுளி துறை உற்பத்தி 7 சதவீத முதல் 9 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜவுளி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை குறைவு மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிக இருப்பை வைத்துக்கொள்ள விரும்புவதுமே உற்பத்தி உயர காரணம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.