மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு:சாதனை படைத்த இந்திய பொருளாதாரம்!

இந்தியா பொருளாதாரம்
இந்தியா பொருளாதாரம்

ந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலைய எட்டி இருப்பதாக சர்வதேச நிதியாகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள் தொகையை கணக்கிட்டு தீர்மானிக்கப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்து விட்டது என்று சர்வதேச நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் இந்தியாவுடைய பொருளாதாரத்தை உயர்த்த இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2026 - 2027 நிதியாண்டிற்குள் 5 டிரில்லியன் என்ற நிலையை அடைய செய்வது என்ற தொலைநோக்குப் பார்வையை கொண்டு ஒட்டுமொத்த இந்திய அரசு நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நிதியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், இந்தியா நடப்பு நிதியாண்டின் தற்போதைய காலகட்டத்தில் 4 டிரில்லியன் என்ற பொருளாதார நிலையை எட்டி உள்ளது. இது இந்திய உள்நாட்டு உற்பத்தியின் மிகப்பெரிய சாதனையாகவும். மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இவ்வாறு 333 லட்சம் கோடி ரூபாய் அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 5வது பெரிய நாடு என்ற நிலையை எட்டி இருக்கிறது. மிக விரைவில் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் நிலை உருவாகி இருக்கிறது. இந்தியாவினுடைய இந்த அதிதீவிர பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சி அடைந்த நாடுகளையும் வியப்படைய செய்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com