உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை செலுத்தும் நாடாக உயர்ந்து வருகிறது. இதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முக்கிய காரணமாகும். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை மாபெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது என்றும் உலக வங்கி பாராட்டியுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது, ஜி 20 நாடுகளுக்கு நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றக்கூடிய இந்தியா உலகின் மிக முக்கிய பொருளாதாரம் நாடாக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் நடவடிக்கைகளில் டிஜிட்டல்மயம் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நிதி சேவையில் டிஜிட்டல் பரிவர்த்தனை 6 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதற்கு பிரதமரின் ஜந்தன் வங்கி கணக்கு திட்டம், ஆதார் திட்டம் மற்றும் அனைவருக்கும் தொலைத் தொடர்பு சாதனங்களை கொண்டு சென்ற நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் மற்ற நாடுகள் 50 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனையை இந்தியா 6 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜந்தன் வங்கி கணக்கு திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது 14. 72 கோடி பேர் புதிதாக வங்கி கணக்கை தொடங்கினர். 2022 ஜூன் மாதம் வரையில் 46. 20 கோடி பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி இருக்கின்றனர்.
இதில் 26 கோடி பேர் பெண்கள். இந்த வங்கி கணக்கு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மிக எளிதாக விளிம்பு நிலை, எளிய கிராமப்புற மக்களுக்கும் சென்றடைந்து இருக்கிறது. மேலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையில் இந்தியாவுடைய வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இந்தியா தொலைதொடர்புத் துறையில் அடைந்திருக்கக் கூடிய முன்னேற்றத்தின்னுடைய வெளிப்பாடு காரணமாக அனைத்து பகுதிகளிலும் யுபியை பரிவர்த்தனை எளிதாக செய்ய முடிகிறது.
அதிலும் புதிய புதிய நடைமுறைகளை விரைவாக புகுத்தி வருகிறது. இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையில் தனியார் துறையின் பங்கும் முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு நடப்பாண்டில் மே மாதத்தில் மட்டும் 941 கோடி ரூபாய்க்கு யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி இந்திய மக்கள் எளிதாக நிதி சேவைகளை மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர் என்று உலக வங்கி பாராட்டி உள்ளது.