வாகன ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் சரிவு... ஏன் தெரியுமா?

Car Export
Car Export

ந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களின் ஏற்றுமதி சரிவை சந்தித்திருப்பது, உற்பத்தியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் நிலையான பொருளாதார சூழல், உற்பத்தி சக்தி, பணியாளர்களின் எண்ணிக்கை, காலநிலை, போக்குவரத்து வசதி, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வரி சலுகை காரணமாக உலகின் பல்வேறு பெருநிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. இதனால் இந்தியாவில் பல்வேறு வகையான தொழில்கள் அதிகம் தொடங்கப்பட்டு வருகின்றன.

அதில் வாகன உற்பத்தி இந்தியாவின் உடைய மிக முக்கிய பொருளாதார நடவடிக்கையாக மாறி இருக்கிறது. உலகின் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய ஆலைகளை தொடங்கி உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு வாகன விற்பனை உயர்வை கண்டிருந்தாலும் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் சரிவை சந்தித்து இருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டிருக்க கூடிய நிலையற்ற பொருளாதார அரசியல் தன்மை காரணமாகவும், போர் பதற்றம் காரணமாகவும் வாகன விற்பனை சரிவை சந்தித்து இருக்கிறது.

இவ்வாறு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாதத்தில் 22 லட்சத்தி 11 ஆயிரத்து 457 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 26 லட்சத்து 80 ஆயிரத்து 527 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நடப்பு நிதியாண்டில் 17 சதவீதம் வாகன ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.

மேலும் இருசக்கர வாகன ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 21,04, 895 ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் அதே காலகட்டத்தில் 16,85,9700 குறைந்துள்ளது. இது 20 சதவீதம் வீழ்ச்சியாகும். மூன்று சக்கர வாகன ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 2,12, 126 ஆக இருந்தது, நடப்பு நிதி ஆண்டில் 1,55,154 ஆக சரிவை சந்தித்துள்ளது.

வர்த்தக வாகனம் கடந்த நிதியாண்டில் 42,306 ஆக இருந்தது, ஆனால் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 31, 864 ஆக குறைந்துள்ளது. இது 25 சதவீதம் வீழ்ச்சியாகவும். அதே சமயம் சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தும் நான்கு சக்கர வாகன ஏற்றுமதி சற்று உயர்ந்திருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த ஏற்றுமதி 17 சதவீதம் சரிவை சந்தித்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com