சர்வதேச பொருளாதாரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இந்தியா!

Indian Economy.
Indian Economy.

சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாக அமெரிக்க நிறுவனம் தகவல்.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் எஸ் அண்ட் பி குளோபல் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கை, உலகில் தற்போது ஏற்பட்டு இருக்க கூடிய போர் பதற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை சர்வதேச பொருளாதாரத்தை முடக்கி இருக்கிறது. நாடுகளுக்கிடையே ஏற்பட்டு இருக்கக்கூடிய போர் சூழல்களால் நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை இன்மை அதிகரித்திருக்கிறது. இதனால் சர்வதேச வர்த்தகம் வரலாறு காணாத பின்னடைவை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக உணவுப் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் உடைய விலை ஏற்றம் உலகை பாதிப்படைய செய்திருக்கிறது.

சீனா நடப்பா ஆண்டு 4.6 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு முன்னணியில் இருக்கிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு 3 சதவீதமாக பொருளாதார வளர்ச்சியாக குறையும். இதற்கு முக்கிய காரணம் வீட்டு வசதி துறையில் ஏற்படுத்தக்கூடிய பின்னடைவு. 2026 ஆம் ஆண்டு 4.6 வளர்ச்சியை காணும். மேலும் சீனாவை மையப்படுத்தி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடைய வர்த்தக செயல்பாடு குறைந்து இருக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார நிலையை பொறுத்த வரை தொடர்ச்சியாக பின்னடைவை சந்திக்கும். தற்போது 2.4 சதவீத வளர்ச்சியோடு முன்னணியில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு 1.5 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும். 2025 ஆம் ஆண்டு 1.4 சதவீதமும். 2026 ஆம் ஆண்டு 1.8 சதவீதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா சந்திக்கும். ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளும் பொருளாதாரத்தில் அமெரிக்காவைப் போன்று பின்தங்கிய நிலையை சந்திக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 7.60 சதவிகிதம் முன்னேற்றம்!
Indian Economy.

அதே சமயம் சர்வதேச பொருளாதாரத்தில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பது இந்தியா. இந்தியாவினுடைய அமைதியான சூழல் முதலீட்டை ஈர்த்து இருக்கின்றது. தற்போது 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா கண்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு 6.4 சதவீத வளர்ச்சி இந்தியா எட்டும். 2025 ஆம் ஆண்டு 6.9 சதவீதமும்,2028 ஆம் ஆண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா காணும். தற்போது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.

வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியாவே பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com