வங்கி, பங்கு, தங்கம் என்று சேமிப்பில் ஆர்வம் செலுத்தும் இந்தியர்கள்!

Indians interested in saving.
Indians interested in saving.

இந்தியாவில் முன்பை காட்டிலும் தற்பொழுது தங்கள் வருமானங்களை சேமிக்க வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

தி மணி 9 என்ற நிறுவனம் இந்தியாவில் 20 மாநிலங்களில் 35 ஆயிரம் குடும்பங்களிடம் நடத்திய ஆய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்திய மக்கள் தங்கள் வருமானங்களை சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வருமானங்களில் சொத்துக்கள் வாங்கி சேமிக்கவும், வங்கிகளில் டெபாசிட் செய்து சேமிக்கவும் அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் குறிப்பாக இடங்களில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்திருக்கிறது.

மேலும் 77 சதவீத குடும்பங்கள் வங்கிகளில் தங்கள் வருமானங்களை டெபாசிட் செய்து வட்டிகள் மூலம் பயனடைய விரும்புகின்றனர். தபால் நிலையங்கள் 31 சதவீத குடும்பங்கள் டெபாசிட் செய்து வருமானத்தை சேமிக்கின்றனர். தங்கத்தில் 21 சதவீத பேர் முதலீடு செய்ய விரும்புகின்றனர். காப்பீடு திட்டங்களில் 8 பேர் முதலீடு செய்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆயுள் காப்பீட்டில் 27 சதவீத பேரும், 53 சதவீத பேர் மருத்துவ காப்பீட்டிலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நிதிகளை தொழிலில் முதலீடு செய்ய 9 சதவீத குடும்பங்கள் தீவிரம் காட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
வரலட்சுமி வருவாய் அம்மா!
Indians interested in saving.

இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் மாநிலமாக கர்நாடகா முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், அடுத்த இடத்தில் சண்டிகர் உள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை அதிகம் கொண்ட மாநிலமாக பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. மேலும் இந்திய குடும்பங்களில் ஆடம்பர வாழ்க்கை விரும்பும் குடும்பங்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு கணிசமாக உயர்ந்து 5 சதவீதமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com