வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் ஜிடிபி உயர்வு!

இந்தியா பொருளாதாரம்
இந்தியா பொருளாதாரம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையான பாதையை நோக்கி முன்னேறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய தகவல் புள்ளியில் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. இந்தியாவுடைய மனித சக்தி பொருளாதார வளர்ச்சியினுடைய முக்கிய ஆயுதமாக மாறி இருக்கிறது. இதனால் உற்பத்தி திறன் மட்டுமல்லாது விற்பனை சந்தையாகவும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது.

நடப்பு நிதியாண்டின் காலாண்டு பகுதியில் இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது அண்டை நாடான சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும் பொழுது கூடுதலாகும். குறிப்பாக சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாது தொழில்துறை, வர்த்தகம், உற்பத்தி, சில்லறை விற்பனை, மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய துறைகளில் இந்தியாவினுடைய செயல்பாடு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவுடைய செயல்பாடு 7.7 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வளர்ச்சியை கண்டு இருக்கிறது. அதே சமயம் விவசாயத் துறையில் நடப்பு நிதியாண்டின் காலாண்டு பகுதி வரை உற்பத்தி 4.7 சதவீதமாக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் நிதியாண்டோடு ஒப்பிட்டு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வரக்கூடிய காலங்களில் இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்திக்க நேரிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், விளை நிலங்களின் பரப்பளவு குறைவு, விளைபொருள் உற்பத்தி குறைவு, 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவையினால் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் நடப்பு நிதி ஆண்டின் காலாண்டு பகுதி வரை இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி வல்லரசு நாடுகளில் இணையான திறனை உள்ளடக்கியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com