இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாருதி சுசுகி ஜிம்னி தண்டர் எடிஷனின் சிறப்பம்சங்கள்!

Maruti Suzuki Jimny Thunder Edition
Maruti Suzuki Jimny Thunder Edition
Published on

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி தண்டர் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக விளங்குவது மாருதி சுசுகி. இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயணிகள் காரில் 44% பங்குகளுடன் மாருதி சுசுகி நிறுவனம் தனித்துவமாக விளங்குகிறது. மேலும் இந்நிறுவனம் தனது விற்பனையை தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக புதிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி தண்டர் எடிசன் கார் ரகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கம்பீரமான தோற்றம், கண்ணைக் கவரும் வண்ணம் என்று இப் புதிய மாடல் விற்பனைக்காக வந்துள்ளது. மேலும் ஸெட்டா, ஆல்பா வேரியண்டுகளின் சிறப்பு பதிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1983 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனை தொடங்கிய மாருதி சுசுகி நிறுவனம் தனது நிறுவன கார்களின் கம்பீரமான தோற்றத்தின் மூலம் இந்திய சந்தையில் முக்கிய போட்டியாளராக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் ஜிம்னி தண்டர் எடிஷனும் பல்வேறு நவீன சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கின்றது. இந்த காரில் 1.5 லிட்டர் போர் சிலிண்டர், கே சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், மெனுவல் அண்டு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், சிக்ஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், போர் வில் டிரைவ், ஹில் ஹாஸ்ட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, பிரேக் அசிஸ்ட் பங்க்ஷன் என்ற சிறப்புகளை கொண்டு லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் இக்கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவ்வகை கார் 10.74 லட்சம் முதல் 14.05 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com