பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவினுடைய நிலை: ஆய்வு அறிக்கையின் முடிவு!
இந்தியா மேற்கொள்ளும் பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் புள்ளிவிபர ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர், பண வீக்கம், நாடுகளுக்கு இடையேயான தவறான பொருளாதார கொள்கை, நம்பிக்கையற்ற நிதி மேலாண்மை ஆகிய காரணங்களால் நடப்பு நிதியாண்டில் ஆறு மாதங்களில் சர்வதேச சந்தை மந்தமாக காட்சியளித்தது.
அதே நேரம் இந்தியாவினுடைய சரக்கு மற்றும் சேவை துறையில் ஏற்றுமதி, இறக்குமதி என்பது மாறுதல் நிறைந்ததாக காணப்படுகிறது என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள், 2022 ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவினுடைய சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 37 ஆயிரத்து 950 கோடி டாலராக இருந்ததாகவும், தற்போதைய நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 1.5 சதவீதம் வளர்ச்சியடைந்து 38,540 கோடி டாலராக உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை தான காலகட்டத்தில் இறக்குமதி இதையை பொருத்தவரை 44 ஆயிரத்து 170 கோடி டாலராக இருந்ததாகவும், நடப்பு ஆண்டின் அதே காலகட்டத்தில் 5.9 சதவீதம் குறைந்து 41 ஆயிரத்து 550 கோடி டாலராக உள்ளது.
பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவினுடைய சரக்கு மற்றும் சேவை துறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் நடைபாண்டின் ஆறு மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் கோடி டாலரை கடந்துள்ளது.
அதே நேரம் இந்திய இந்திய பொருட்களை வாங்க பெரும்பான்மையான நாடுகளில் ஆர்வம் காட்டாததன் காரணமாக சரக்கு ஏற்றுமதியில் சுணக்கம் நிலவுகிறது.
அதே சமயம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு 25 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும் 29 பொருட்களில் 11 பொருட்களுக்கு மட்டும் நடப்பாண்டியன் ஆறு மாதத்தில் கூடுதல் ஏற்றுமதி நடைபெற்று இருக்கிறது. இவ்வாறு தொலைத்தொடர்பு சாதனங்கள், கணினி, மின்னணு பொருட்கள் ஆகியவை கூடுதல் ஏற்றுமதியைக் கண்டுள்ள பொருட்கள் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.