ஆண்ட்ராய்டு போன் ஏற்றுமதியில் இந்தியா முன்னேற்றம்!

ஸ்மார்ட் போன்கள் மாதிரி படம்
ஸ்மார்ட் போன்கள் மாதிரி படம்

ண்ட்ராய்ட் போன் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் ஏற்றுமதியில் இந்தியா பன்மடங்கு முன்னேற்றத்தை சந்தித்து வருவதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னியல் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய உலக சூழலில் போர் பதற்றம், காலநிலை மாற்றம், உற்பத்தி திறன் குறைவு, ஊழியர் பற்றாக்குறை என்று பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது. ஆனால் இந்தியா அனைத்து வகையான பிரச்சனைகளில் இருந்தும் தன்னை பாதுகாத்துக் கொண்டு தொடர் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதனால் உலகின் பெரு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தங்கள் தொழிலை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறு ஆப்பிள் நிறுவனமும் சீனாவில் தன்னுடைய உற்பத்தி நிலையங்களை குறைக்க தொடங்கி இருக்கிறது. அதற்கு மாற்றாக இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தி பன்மடங்கு பெருகி இருக்கிறது. குறிப்பாக நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 24, 850 கோடி ரூபாய்க்கு மொபைல் போன்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்தியாவுடைய அந்நிய செலாவணி நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்று இந்திய செல்லுலார் மற்றும் மின்னியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருப்பது, இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே நேரம் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 24 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியில் பாதிக்கும் மேலாக இந்தியாவின் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை மேற்கொண்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் ஏற்றுமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன.

மேலும் 2025 - 26 ஆம் நிதியாண்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 25 லட்சம் கோடி ரூபாயை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன்கள் ஏற்றுமதியை மேற்கொள்ள திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com