அதானி குழுமத்திற்கு கடன் கொடுக்கப் போட்டி போடும் சர்வதேச வங்கிகள்!

அதானி
அதானி
Published on

தானி குழுமத்திற்கு மறுக்கடன் வழங்க 10 சர்வதேச வங்கிகள் முன் வந்திருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக அதிதீவிரமாக வளர்ந்து வரக்கூடியது அதானி குழுமம் இப்பொழுது பல்வேறு துறைகளில் தங்களுடைய விரிவான பங்களிப்பை செலுத்தி தொடர் முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை அதானி சிமெண்ட் 54 ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்தது. இதற்காக வங்கிகளிடம் இருந்து 29 ஆயிரத்து 50 கோடி ரூபாயை கடனாக பெற்றது. தற்போது அந்தக் கடனுக்காக 10 சர்வதேச வங்கிகள் மறு முதிர்ச்சி கடன் வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றன என்று அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.

இதுகுறித்து அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பது, அதானி குழுமம் தன்னுடைய தொடர் வளர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை, அதனுடைய முன்னேற்றத்திற்கு தற்போது சான்றாக 10 சர்வதேச வங்கிகள் மறுக்கடன் வழங்க முன் வந்திருக்கின்றன.

அதானி சிமெண்ட் ஆலை பெற்ற 29 ஆயிரத்து 50 கோடி ரூபாய் கடனை மூன்று ஆண்டு மறு முதிர்ச்சி அடிப்படையில் மறு கடனாக வழங்குவதற்கு 10 சர்வதேச வங்கிகள் முன் வந்திருக்கின்றன. இதன் மூலம் அதானி குழுமத்தினுடைய நம்பகத்தன்மை சர்வதேச அரங்கில் மேலோங்கி வருவதை காட்டுகிறது.

அதானி குழுமத்தின் தொடர் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் நிறுவனத்தை வளர்ச்சியின் பாதை அழைத்து செல்கிறது. மேலும் உலக அளவில் அதானி குழுமத்தினுடைய மரியாதை, மதிப்பு பெருகி வருகிறது. முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அதானி குழுமம் வளர்ந்து வருவதை இது காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com