இந்தியாவில் ஐபோன் பேட்டரி செல் தயாரிப்பு !

iPhone battery cell
iPhone battery cell

இந்தியாவில் ஐபோனுக்கான லித்தியம் அயன் பேட்டரி செல்களை தயாரிக்க ஜப்பான் நிறுவனம் முடிவு.

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது முக்கிய கூட்டாளியாக இருந்த சீனாவில் இருந்து தனது செயல்பாடுகளை பெருமளவில் நிறுத்திக் கொண்டு, இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியை அதிகரித்திருக்கிறது.

ஐபோன், இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாலும், இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், ஐபோன் உதிரிப்பாக உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் தொடங்க, பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான டிடிகே கார்ப், இந்தியாவில் ஐபோனுக்கு தேவையான லித்தியம் அயன் பேட்டரி செல்களை உற்பத்தி செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஹரியானா மாநிலத்தில் மிகப்பெரிய ஆலையை ஏற்படுத்தி, தனது பணியை தொடங்க டிடிகே கார்ப் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

தொழில்நுட்பங்களின் பெரும் பகுதியை எளிதில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஐபோன் இருப்பதால், மொபைல் போன் பயனாளர்கள் பலரும் ஐபோனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் தொகை ஐபோன் மீதான உள்நாட்டு தேவையை அதிகரிக்க செய்து இருக்கிறது. மேலும் நாட்டின் நிலையான தன்மை, பொருளாதார நிலை ஆகியவை உற்பத்தி நிறுவனத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதால், இந்தியா மிகச் சிறந்த உற்பத்தி மையமாக உருவெடுத்திருக்கிறது.

அதிலும், தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த உற்பத்தி இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜப்பானைச் சேர்ந்த டி டி கே கார்ப் நிறுவனம், தனது ஆலையை தொடங்க இருப்பதாக ஒன்றிய அமைச்சர் ராஜுவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com