இன்றைய உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தால் சூழப்பட்டுள்ளது. தகவல்கள் ஸ்மார்ட்போன் வாயிலாக நம் விரல் நுனியில் உள்ளன இணையம் என்ற மாபெரும் கடலில் நீந்துவதற்கு நாம் அனைவரும் பழக்கப்பட்டுவிட்டோம். சமூக வலைதளங்கள், வலைப்பதிவுகள், யூடியூப் வீடியோக்கள் என எண்ணற்ற தகவலை பரிமாறும் விஷயங்கள் வந்துவிட்டன. இந்த தகவல் வெள்ளத்தில் நாம் எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்பதை அறிவது மிகவும் முக்கியம். குறிப்பாக, பணத்தை முதலீடு செய்யும் விஷயங்களில் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்மைகள்: இணையத்தில் ஏராளமான முதலீட்டு ஆலோசனைகள் கிடைக்கின்றன. பல நிபுணர்கள், வல்லுனர்கள், தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நம்மை குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடும். இதன் நன்மைகள் என்று பார்க்கும்போது, இணையம் வழியாக எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் முதலீடு தொடர்பான தகவல்களை நம்மால் பெற முடியும். பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம். சமூக வலைதளங்கள் மூலம் நிபுணர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, நமக்கான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும்.
தீமைகள்: இணையத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துக்களை பதிவிடலாம். எனவே, தவறான தகவல்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இணையத்தில் கிடைக்கும் ஆலோசனைகள் பொதுவானதாகவே இருக்கும். அது உங்கள் தனிப்பட்ட நிதி நிலைமைக்கு ஏற்றதாக இருக்காது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த இணையத்தை பயன்படுத்துகின்றன. எனவே, அவர்கள் சொல்லும் தகவல்களை நாம் உண்மை என நம்பிவிடக்கூடாது.
இணையத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
ஒரு நபர் சொல்லும் தகவல்களை நம்புவதற்கு முன் அது உண்மையா என்பதை சரி பார்க்கவும். பல்வேறு ஆதாரங்களை சேகரித்து ஒப்பிட்டுப் பார்க்கவும். முதலீடு செய்வதற்கு முன் ஒரு நிதி ஆலோசகரை அணுகி உங்கள் தனிப்பட்ட நிதி நிலைமைக்கு ஏற்ற ஆலோசனையைப் பெறவும்.
முதலீடு என்பது நீண்ட கால செயல்முறை. உடனடியாக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். உடனடியாக லாபம் பார்க்கலாம் என யாராவது சொன்னால், அவர்களை நம்பி முதலீடு செய்யாதீர்கள்.
ஒரே இடத்தில் மொத்த பணத்தையும் முதலீடு செய்யாமல், அதை பல முதலீட்டு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யவும். எந்த முதலீட்டிலும் ஆபத்து என்பது இருக்கும். எனவே, அதிக லாபம் கிடைக்கும் என்று கூறும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
இணையம் என்பது ஒரு வரப்பிரசாதம். ஆனால் அதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே நாம் அதன் பலன்களை அடைய முடியும். இணையத்தில் கிடைக்கும் முதலீட்டு ஆலோசனைகளை எப்படி கையாள்வது என்பதை நாம் முறையாக கற்றுக்கொண்டு, முதலீடு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே நம்மால் லாபம் பார்க்க முடியும்.