இஸ்ரேல் பாலஸ்தீன போர் சூழலால் இந்தியாவினுடைய பங்குச் சந்தை 14 லட்சம் கோடி இழப்பை சந்தித்து இருக்கிறது.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக உலகப் பங்குச் சந்தை தொடங்கி இந்திய பங்குச்சந்தை வரை மிகப் பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக தற்போது பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் காட்டாத நிலை அதிகரித்திருக்கிறது.
அதேசமயம் இருக்கின்ற பங்குகளையும் விற்பனை செய்ய பங்குதாரர்கள் முனைப்பு காட்டுகின்றனர். இதனால் புதிய பங்குகளை வாங்க ஆளில்லாமல் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி சந்தித்து இருக்கின்றன.
கொரோனா காலத்திற்கு பின்பு தற்போது உலக பங்கு சந்தை முதல் இந்திய பங்குச் சந்தை வரை தொடர் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் இஸ்ரேல், பாலஸ்தீன போர் காரணமாக உலக பொருளாதாரத்தில் நம்பகமற்ற தன்மை நிலவுதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு மிகப் பெரும் அளவில் வீழ்ச்சி சந்தித்திருக்கின்றன. தனியார் நிறுவனங்களுடைய பங்கும் மிகக் குறைந்த விலையிலேயே விற்பனையாவதால் இது சர்வதேச சந்தை பொருளாதாரத்தை மிகப் பெரும் அளவில் பாதிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொடங்கிய, அரசாங்கங்கள் வரை பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்திய பங்குச் சந்தை 3.5 சதவீதம் சரிவை கண்டிருக்கிறது. சென்செக்ஸ் 522 புள்ளி குறைந்து 64,049 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 0.81 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது. நிஃப்டி 159 புள்ளிகள் குறைந்து 19,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 0.83 சதவீதம் சரிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்போசிஸ், அதானி என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு, டாடா, பஜாஜ் என்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களினுடைய பங்கும் மிகப்பெரும் அளவில் குறைந்து இருக்கிறது. இதனால் இந்திய பங்குச் சந்தைக்கு 14.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போர் பதற்றம் தனிந்த பிறகே மீண்டும் பங்குச்சந்தை இயல்பு நிலையை அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.