கூகுள் பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது யுபிஐ பரிவர்த்தனை தொடர் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதி தீவிரமாக வளர்ந்து வரும் யுபிஐ பரிவர்த்தனையை செயல்படுத்தி வரும் ஆன்லைன் செயலி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தும், வாடிக்கையாளர் நலன் கருதியும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய யுபிஐ பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய கூகுள் பே நிறுவனம் தற்போது ஐசிஐசிஐ பேங்க் மற்றும் இ பே லேட்டர் நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணைய வழி கடன் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக கூகுள் பே வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கை, கூகுள் பே நிறுவனம் கிரெடிட் முன்செய் என்ற சாசெட் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. சாசெட் கடன்கள் எஸ் எம் பி நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 15,000 வரை கடன் வழங்க முடியும்.
கூகுள் பே நிறுவனம் தகுதிப்படுத்தும் தனிநபர்கள் அல்லது வணிகர்கள் இந்த சேவையை பெற முடியும் என்றும், ஐந்து பயனாளர்களில் ஒரு பயனாளர் தகுதி உடையவராக தற்போது தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக வணிக கடன் பெறுவோருக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை தற்போது முன்முயற்சியாக மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்களுடன் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒப்பந்தத்தின் காரணமாக இவற்றை தற்போது செயல்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.