

எல்ஐசி பாலிசிதாரர் பாலிசியை பினையாக வைத்து எளிதில் கடன் பெற முடியும்.
தனி நபர்கள் பலரும் கடன் பெறுவதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்திருப்பர். குறிப்பாக பினையாக வைக்க சொத்து மதிப்பு மற்றும் சொத்துக்கள் இல்லாத நபர்கள் கடனை பெற பெரும் சிரமத்தை அனுபவிப்பார். மேலும் குறைந்த சிபில் ஸ்கோர் உள்ளவர்களும் கடன் பெறுவது உறுதிப்படுத்த முடியாத ஒன்று. இந்த நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் எல்ஐசி பாலிசியை பினையாக வைத்து கடனை பெற முடியும்.
குறைந்த சிபில் ஸ்கோர் உள்ளவர்களும் இந்த முறையை பயன்படுத்தி கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு எல்ஐசி எண்டோமென்ட் பாலிசிதாரராக இருக்க வேண்டும். மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பாலிசித் தொகையை செலுத்தி வரவேண்டும், உத்திரவாதமான சரண்டர் மதிப்பு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் 18 வயதிற்கு மேல் உள்ளவராக இருப்பது கட்டாயம். இத்தகுதிகள் உள்ளவர்கள் தங்கள் எல்ஐசி பாலிசிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பினையாக வைத்து கடனைப் பெற முடியும்.
கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் முன் காப்பீட்டுக் கொள்கை முதிர்ச்சியடைந்தால், தேவையான தொகையை எல்ஐசியில் கழித்துக் கொள்ள முடியும். இவ்வாறு பாலிசியின் சரண்டர் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் தொகை வழங்கப்படும்.
மேலும் கடன் பெற விரும்புவார் எல்ஐசி அலுவலகத்தின் மூலமாகவோ அல்லது இணையவழியாகவோ எளிதில் விண்ணப்பித்து கடன் பெற முடியும் என்பதும் இதன் தனி சிறப்பு.