

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பல தொழில்கள் உள்ளன. நம் திறமை, ஆர்வம் மற்றும் சந்தை தேவை ஆகியவற்றை பொறுத்து சரியான தொழிலை தேர்ந்தெடுத்து (business ideas) செய்ய அதிக லாபம் பெறலாம். உணவு கேட்டரிங், ஆன்லைன் வணிகங்களான அஃபிலியேட் மார்க்கெட்டிங் மற்றும் டிராப்ஷிப்பிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஃப்ரீலான்சிங் போன்றவை குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களாகும். இந்த தொழில்களுக்கு பெரிய மூலதனம் தேவையில்லை. நம் திறன்களையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிலையான வருமானத்தை ஈட்ட முடியும்.
1) உணவு கேட்டரிங்:
கேட்டரிங் சேவைக்கு எப்பொழுதும் தேவை இருப்பதால், இது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்றாகும்.
ஆன்லைன் வணிகம்:
2) டிராப்ஷிப்பிங் (Dropshipping):
ஒரு ஆன்லைன் கடையை உருவாக்கி, தயாரிப்புகளை ஆர்டர் செய்து, மூன்றாம் தரப்பினர் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதன் மூலம் லாபத்தை ஈட்டலாம்.
3) அஃபிலியேட் மார்க்கெட்டிங்:
ஒரு குறிப்பிட்ட துறையில் நம் ஆர்வத்தைப் பயன்படுத்தி, தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி, விற்பனையின் மூலம் கமிஷன் பெறலாம்.
4) ஆன்லைன் பேக்கரி:
வீட்டிலிருந்து ஆன்லைனில் பேக்கரி பொருட்களை ஆர்டர் செய்து விற்கலாம். பேக்கிங் செய்வதில் ஆர்வம் இருந்தால் வீட்டிலேயே கேக்குகள், குக்கீகள் போன்றவற்றை செய்து உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கும், ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம்.
டிஜிட்டல் சேவைகள்:
5) டிஜிட்டல் மார்க்கெட்டிங்:
வணிகங்களுக்கு அவர்களின் ஆன்லைன் இருப்பை மேம்படுத்த உதவுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். பல சிறு வணிகங்களுக்கு ஆன்லைன் பிரசன்ஸ் தேவைப்படுகிறது. சமூக ஊடக மேலாண்மை, தேடுபொறி மேம்படுத்தல் (SEO) அல்லது உள்ளடக்க உருவாக்கம் போன்ற சேவைகளை வழங்குவது அதிக லாபம் தரும்.
6) ஃப்ரீலான்சிங் (Freelancing):
நம் திறமைகளை உதாரணத்திற்கு எழுத்து, கிராபிக் வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு (graphic design), நிரலாக்கம் (app development), வலைத்தள மேம்பாடு போன்ற நம் திறமைகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட திட்டங்களில் வேலை செய்து லாபம் ஈட்டலாம்.
7) ஃபேஷன் பொட்டீக்கள்:
இந்தியாவில் ஃபேஷன் மற்றும் ஃலைப்ஸ்டைல் தொழில் நல்ல வளர்ச்சியில் உள்ளது. நவநாகரிக உடைகள் மற்றும் அணிகலன்களை ஆன்லைனில் விற்கலாம்.
8) கிளவுட் கிச்சன்:
டெலிவரிக்கு மட்டுமேயான உணவகங்களை சிறிய இடத்தில் தொடங்கி, ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற செயலிகள் மூலம் விற்பனை செய்வது அதிக லாபம் ஈட்ட ஒரு சிறந்த வழியாகும்.
9) ஆன்லைன் பயிற்சி அல்லது வகுப்புகள்:
ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் இருந்தால் உதாரணத்திற்கு அன்னிய மொழிகள் அதாவது வெளிநாட்டு மொழிகள், கல்விப் பாடங்கள், இசை போன்ற ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் இருந்தால் அதை மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம்.
இந்த தொழில்களை தொடங்குவதற்கு முன்பு நம் திறமைகளை கண்டறிந்து தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் செயல்பட குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பெறலாம். வெற்றிகரமான தொழிலுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, படைப்பாற்றல் மற்றும் சந்தை பற்றிய தெளிவான புரிதல் போன்றவை அவசியம்.