உலக நாடுகளை கலக்கப்போகும் 'மேட் இன் இந்தியா' கார்: ஏற்றுமதி தொடக்கம்..!

Maruthi victoris
Maruthi victorissource:NDTV
Published on

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளதைக் காட்டும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய 'விக்டோரிஸ்' (Victoris) கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' (Make in India) மற்றும் 'மேக் ஃபார் வேர்ல்ட்' (Make for World) திட்டங்களின் கீழ், சுமார் 100 நாடுகளுக்கு இந்தக் கார்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 13 சதவிகிதம் அளவுக்கு ஆட்டோ மொபைல் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி என்ற குழுமத்தின் மூலம் வெளியான தகவல்களாகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுசுகி விக்டோரிஸ்(Maruti Suzuki Victoris). கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் அறிமுகமே செய்யப்பட்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி விக்டோரிஸ் மாறிவிட்டது.

தற்பொழுது இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் மாருதி சுசுகி விக்டோரிஸ் காரும் ஒன்று. இந்தியாவை அடுத்து சர்வதேச சந்தைகளிலும் கலக்க மாருதி சுசுகி விக்டோரிஸ் தற்போது தயாராகி விட்டது. இந்நிறுவனம் விக்டோரிஸ் காரின் ஏற்றுமதி பணிகளைத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து 450 விக்டோரிஸ் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து கப்பல் மூலமாக அவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் விக்டோரிஸ் காரை இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்படி லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற பிராந்தியங்களில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாருதி சுசுகி விக்டோரிஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் சர்வதேச சந்தைகளில் இந்த காரை விக்டோரிஸ் என்ற பெயருக்கு பதிலாக, அக்ராஸ்(Across) என்ற பெயரில் விற்பனை செய்யவுள்ளது. மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் Global NCAP மற்றும் Bharat NCAP என்ற 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

மாருதி சுசுகி விக்டோரிஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் லெவல் 2 அடாஸ்(ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளையும் மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு ஹிந்தி தெரியும்... "பிஜி ஹிந்தி" தெரியுமா? – இந்தியர்கள் உருவாக்கிய புதுமையான மொழிக்கு அரசு அங்கீகாரம்!
Maruthi victoris

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com