Microsoft fee increased.
Microsoft fee increased.

கட்டணத்தை உயர்த்திய மைக்ரோசாப்ட்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published on

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்பு மற்றும் இணையதள சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய மந்த நிலையை சமாளிக்கவும், தொழில்நுட்ப பாகங்கள் மற்றும் உற்பத்தி விலை வியர்வை கருத்தில் கொண்டும், மேலும் பிராந்திய அடிப்படையிலான சீரான விலையை நிலைநாட்டவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் இணையதள சேவைகளின் உடைய கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்!
Microsoft fee increased.

குறிப்பாக இந்தியாவில் பிராந்திய அடிப்படையிலான விலையை சீராக்கும் பொருட்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை கருத்தில் கொண்டு 6 சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உடைய இந்த அறிவிப்பு, மற்ற சர்வதேச நிறுவனங்களின் விலை உயர்வுக்கும் வழிவக்கக்கூடும்.

அதேசமயம் வணிக வாடிக்கையாளர்கள் முன்பு பதிவு செய்த ஆர்டர்களுக்கும், நிலுவையில் உள்ள ஆர்டர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா தற்போது தொழில்நுட்பத் துறையில் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முடிவு இந்தியாவில் பொருளாதார ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த கூடும்.

logo
Kalki Online
kalkionline.com