30 ml 10 லட்சம் - 'பல கோடி அப்பு!' என்னது? பெர்ஃப்யூம் தான்..!

Luxury Perfumes
Luxury Perfumes

ஆரம்ப காலத்தில், உடல் துர்நாற்றத்தை மறைப்பதற்காக வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது Luxury car, Luxury dress மற்றும் luxury accessories போன்று, வாசனை திரவியங்களும் ஆடம்பர, அதிநவீன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாசனை திரவியங்களின் விலையானது அவற்றின் மூலப்பொருட்களின் தரம், அரிதான நறுமணம் மற்றும் பேக் செய்யப்படும் பாட்டில்களின் கலைத்திறனை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இது போன்ற உயர்தர வாசனை திரவியங்கள், பெரும்பாலும் ஆயிரக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகிலேயே விலையுயர்ந்த 5 வாசனை திரவியங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. Baccarat Les Larmes Sacree de Thebes Perfume:

Baccarat Les Larmes Sacree de Thebes Perfume
Baccarat Les Larmes Sacree de Thebes PerfumePinterest

30 ml அளவு கொண்ட இந்த வாசனை திரவியத்தின் விலை கிட்டத்தட்ட 5.7 லட்சம். Baccarat Les Larmes Sacree de Thebes Perfume கைவினை படிகத்தால் (handcraft crystal) செய்யப்பட்ட பிரமிட் வடிவ பாட்டில்களில் கிடைக்கிறது. மல்லிகை, ஜெரனியம், மனோரஞ்சிதம் (ylang ylang), ஏலக்காய், துளசி, மிர்ட்டல் (myrtle), சந்தனம் மற்றும் கஸ்தூரி ஆகிய மூலப்பொருள்கள் இதில் உள்ளன.

2. Chanel Grand Extrait:

Chanel Grand Extrait Perfume
Chanel Grand Extrait PerfumePinterest

900 ml கொண்ட Chanel Grand Extrait பெர்ஃப்யூமின் விலை சுமார் 25 லட்சம். மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம் (ylang-ylang) மற்றும் பிற விலையுயர்ந்த மூலப்பொருள்களுடன், நேர்த்தியான நறுமணத்தைக் கொண்டுள்ளது. டிசம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட Chanel Grand Extrait N°5 வாசனை திரவியம் பெண்மையின் உருவகமாக கருதப்படுகிறது. இந்த வாசனை திரவியத்தின் பாட்டில் தூய படிகத்தால் ஆனது. ஒவ்வொரு தெளிப்பிலும் இதன் வாசனை தூய்மை மற்றும் ஆடம்பரத்தை உள்ளடக்கியது.

3. Clive Christian No. 1 Imperial Majesty: 

Clive Christian No. 1 Imperial Majesty Perfume
Clive Christian No. 1 Imperial Majesty PerfumeTimes of India

30 ml அளவு கொண்ட இந்த Clive வாசனை திரவியத்தின் விலை கிட்டத்தட்ட 10 லட்சம். ரோஸ் ஆயில், ஜாஸ்மின் மற்றும் டஹிடியன் வெண்ணிலா ஆகியவற்றை மூலப்பொருள்களாக கொண்டுள்ளது. இதன் பாட்டிலின் கழுத்துப் பகுதியானது 18-காரட் தங்கம் கொண்டும், மூடியானது 5 காரட் வைரம் பயன்படுத்தியும் முழுக்க முழுக்க கைகளால் வடிவமைக்கப்பட்டது. பிரபல பிரிட்டிஷ் வாசனை திரவ தயாரிப்பாளரான ரோஜா டோவ் இதை வடிவமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
UPI Circle- ஒரே அக்கவுண்ட்; பலபேர் பணபரிவர்த்தனை.. அதெப்படி?
Luxury Perfumes

4. DKNY Golden Delicious:

DKNY Golden Delicious Perfume
DKNY Golden Delicious PerfumePinterest

DKNY கோல்டன் டெலிசியஸ் ஆனது ஒரே ஒரு முறை மட்டுமே தயாரிக்கப்பட்ட Perfume. அதுவும் தொண்டு செய்வதற்குத் தேவையான பணம் திரட்டுவதற்கு தயாரிக்கப்பட்டது. இதில் 2909 விலையுயர்ந்த கற்கள், 2700 வெள்ளை வைரங்கள், 15 ஆஸ்திரேலிய இளஞ்சிவப்பு வைரங்கள், 3.07 காரட் ரூபி, 1.65 காரட் பிரேசிலிய டர்க்கைஸ் பரைபா டூர்மேலைன் ஆகியவை கொண்டு இதன் பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 8.22 கோடி.

5. Shumukh:

Shumukh Perfume
Shumukh PerfumePinterest

இந்தவாசனை திரவியம் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. Shumukh வாசனை திரவியத்தின் பாட்டில்களில் சில வைரங்கள் பதிக்கப்பட்டிருப்பதாலும், இதன் தயாரிப்பு செயல்முறைக்காவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை குறைந்தபட்சம் 8 லட்சத்தை தாண்டுகிறது. இது இந்திய அகர்வுட், சந்தனம், கஸ்தூரி, துருக்கிய ரோஜா மற்றும் பல பொருட்களின் வாசனைகளைக் கொண்டுள்ளது. இதன் நறுமணம் சருமத்தில் 12 மணி நேரமும், துணியில் பயன்படுத்தும்போது சுமார் 30 நாட்களும் நீடிக்குமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com