ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி மீண்டும் தேர்வு!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி மீண்டும் தேர்வு!

ந்தியாவின் மிக முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தினுடைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக முகேஷ் அம்பானி அடுத்த ஐந்தாண்டுகள் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக தொடர்வார் என்று நிர்வாக குழு சார்பில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், வாரிசுகளை தயார் படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இந்திய வர்த்தகத்தில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. மேலும் இந்தியாவில் பல்வேறு வகையான தொழில்களை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதோடு இந்தியாவை கடந்த பன்னாட்டு வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46வது வருடாந்திர கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உச்சபட்ச அதிகார அமைப்புகளில் ஒன்றான உயர்நிலை நிர்வாக குழுவில் இருந்து நீட்டா அம்பானி விலகுவதாக முடிவு எடுத்தார். அதேநேரம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிரந்தர உறுப்பினராக தொடர்வார் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் முகேஷ் அம்பானியினுடை வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஆனந்த அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்தை வழிநடத்த தயார்படுத்துவதற்காக அடுத்த ஐந்து வருடத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தினுடைய தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் முகேஷ் அம்பானியே நீடிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார். என்றும் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் பிரிவின் தலைவராகவும், ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் எனர்ஜி பிரிவின் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அடுத்த கட்ட வளர்ச்சிகளை முன்னெடுப்பதற்கான பல்வேறு வகையான ஆலோசனைகள், செயல் திட்டங்கள் ஆகியவை திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு நிறுவனத்தினுடைய உள்நாட்டு கட்டமைப்பை மேலும் தீவிர படுத்த நிறுவனத்தின் தலைவருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com