நிறுவனத்தை வழிநடத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய தலைமைப் பண்பு!

Must-have leadership traits.
Must-have leadership traits.
Published on

நிறுவனத்தை வழிநடத்துபவர்களுக்கான தலைமைப் பண்பு.

குழு செயல்பாடுகளில் தொடங்கி நிறுவனம், அரசியல் என்று எல்லாவற்றின் வெற்றிகையும் தீர்மானிக்கும் பிரதான ஒன்று தலைமை. வழி நடத்தும் நபர் சரியில்லை என்றால் சறுக்கல்களும், சரிவுகளும், தோல்விகளும் தான் மிச்சமாகும். ஒருங்கிணைந்து ஒன்றின் நடவடிக்கைகளையும், பயணங்களையும், வெற்றியையும் தீர்மானிப்பது தலைமை பொறுப்பில் இருந்து வழி நடத்துபவர்கள் தான். அது வெகுவிரைவில் நடந்து விடலாம் அல்லது சில காலம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது நீண்ட கால முயற்சி பிறகாக இருக்கலாம் இது எல்லாம் தலைமையில் இருப்பவரைக் கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் இன்று நிறுவனங்களை வழிநடத்துபவர்களின் தலைமை பண்பு என்பது உளவியல் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உருவம் சார்ந்ததாகவும் மாறி இருக்கிறது. அதே சமயம் நிறுவனங்களை தலைமையேற்று நடத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளில் முதன்மை பொறுமை, தொழிற்சார்ந்த அறிவு இவையே பிரதானம். ஒரு தொழிலைப் பற்றிய அறிவும் தெளிவும் இருந்தால் மட்டுமே அது சார்ந்த வேலையை பிறரிடம் இருந்து பெற முடியும்.

வேலை செய்பவரால் தான் வேலை வாங்க முடியும் என்பதை எதார்த்தம். பிறகு பேச்சாற்றல், இது பிரதானமான தகுதியாகவும். அதே சமயம் சொல்வதை செய்வது சிறந்த தலைமை பண்புக்கான தனித்தொகுதி. இதனால் மதிப்பு உயரும். பிறர் மத்தியில் தலைமை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இது விரைவான, அதிகப்படியான வெற்றியை தரும்.

இதையும் படியுங்கள்:
நேர்மறை சிந்தனை என்றால் என்னன்னு தெரியுமா?
Must-have leadership traits.

தொலைநோக்கு சிந்தனை நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். நிறுவனத்தோடு ஒன்றிணைந்து தொழிலாளர்களும் வளர வேண்டும் என்ற பரந்துபட்ட பார்வை நேர்மையான தலைமைக்கான அறிகுறியாகும். சகிப்புத்தன்மை, உருவம் ஆகியவையும் தலைமை பண்புக்கான அடையாளங்களாகவும்.

மேலும் உடை இதுவே முதல் கட்ட மரியாதை பெற்றுத்தரும். ஆள் பாதி, அடை பாதி என்பதே இன்றைய சமூகத்தின் பிரதான பார்வையாக உள்ளது. ஆங்கிலம் பேசும் திறன், கவனம், விழிப்புணர்வு, சந்தை சூழல் அறிதல், பலதரப்பட்ட பார்வை, சகிப்புத்தன்மை, நிதானம் ஆகிய குணங்களும் சிறந்த தலைமைக்கான அடையாளங்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com