இதை பின்பற்றினால் புதிய பிசினஸ் தொடங்குவோர் வெற்றியடையலாம்!

New business start-up.
New business start-up.

ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்கும் நபர்கள் வெற்றி பெறுவதற்கான வழி.

இன்று படித்து முடித்த இளைஞர்கள் முதல் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்கள் வரை பலதரப்பினரும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்று முனைப்பு காட்ட தொடங்கி இருக்கின்றனர். இது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தான் என்றாலும், களத்தில் போட்டி தீவிரமடைந்து வருவதால் போட்டியிடும் அனைத்து போட்டியாளர்களும் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்க வேண்டும் என்று முனைப்பு காட்டும் 30 சதவீத இளைஞர்கள் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப் பிடித்து குறுகிய கால நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதிலும் 5 சதவீதப் பேர் மட்டுமே வெற்றியாளர்களாக உருவெடுக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஸ்டார்ட் அப் நிறுவனங்ளை ஏமாற்றி நூதன முறையில் ஊழல்.
New business start-up.

அந்த 5 சதவீதப் பேர் எவ்வாறான ஸ்டார்ட் அப் ஐடியாக்களை பின்பற்றி இருக்கின்றனர் என்பதை பற்றி பார்ப்போம்.

  1. திட்டம் வகுத்தல் : எந்த ஒரு தொழிலை தொடங்கும் முன்பும் ஐடியா இல்லாமல் தொடங்கினால் அது தொடக்கத்திலேயே சரிந்து விழுந்து விடும். தொழில் பற்றிய அனுபவம், சாத்திய கூறுகள், கல்வி, அதைச் சார்ந்த தெளிவு ஆகியவற்றை முதலில் பெற வேண்டும்.

  2. சந்தை ஆராய்ச்சி : திட்டத்தை வகுத்த பிறகு தொழில் பற்றிய சந்தை நிலவரங்களை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்தொழில் உள்ள போட்டியாளர்கள், வாடிக்கையாளர்கள், வர்த்தக நிலவரம், சந்திக்கும் பிரச்சனைகளையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

  3. நிதி திரட்டல் : மேலே குறிப்பிட்ட இரண்டு செயல்பாடுகளை தொடர்ந்து விரிவான திட்டத்தை வகுத்து முதலீடுகளை பெற முயற்சி எடுக்க வேண்டும். முழு தொகையையும் நாமே செலவிடாமல் கடன் பெற்று முதலீடு செய்வது ஏற்றது. இலக்கை தீர்மானித்து, கால சூழ்நிலை உணர்ந்து திட்டத்தை வகுத்து வரவு, செலவுகளை முன்கூட்டியே கணக்கிட்டு பயணிக்க வேண்டும். சிறந்த ஐடியாக்களை மட்டும் ஆவணமாக எண்ணி கடன் தர வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பல உள்ளன.

  4. குறைந்தபட்ச தயாரிப்பு : ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்கும் நபர்கள் எடுத்தவுடன் மிகப்பெரிய அளவில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேவையற்ற நஷ்டத்திற்கு வழிவகுக்கும். முதலில் குறைந்தபட்ச முதலீடை செலுத்தி தயாரித்த பொருட்களை பயன்பாட்டிற்கு விட்டு கருத்து கேட்க வேண்டும். அதன் பிறகு நிறை குறைகளை உணர்ந்து உற்பத்தியை சிறுக சிறுக முன் எடுக்க வேண்டும்.

  5. தொடர்பு விரிவாக்கம் : தொழில்களில் முக்கியமானது தொடர்புகள். தொடர்புகள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல மிக முக்கிய காரணிகள். மேலும் நாம் ஈடுபடும் தொழிலில் திறன்களை வளர்த்துக் கொண்டு நிபுணத்துவத்தை பெற குழு நடவடிக்கைகள் மிக முக்கியம். அதனால் தொழில் சார்ந்த வெற்றியாளர்கள், செயல்பாட்டாளர்கள், வாடிக்கையாளர்களோடு தொடர்பில் எப்பொழுதும் இருப்பது தொடர் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.

  6. பங்குச்சந்தையில் பட்டியல் இடுதல் : தொழில் ஓரளவிற்கு கால் பதித்த பிறகு பங்குச் சந்தையில் பட்டியலிட்டு தொழிலின் விரிவாக்கத்தை பெருக்க வேண்டும். அதிக நிதி திரட்டல் தொழிலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com